Tuesday, 22 July 2014


பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. 

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

ஆகவே இந்த அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


கிரீன் டீயின் நன்மைகள் :

இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படவதை குறைக்கிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நமது உடலில் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.

எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

பற்களில் ஏற்படும் பல் சொத்தையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது.

பருக்கள் வராமலும் தடுக்கிறது. வயதான பின் வரும் ஞாபக மறதி நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. (அல்சீமியர்ஸ் மற்றும் பார்க்கின்சன்ஸ்) மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.

மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.

உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது. புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

கிரின் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.


விட்டமின் ஈ உடலில் குறைந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்பது பள்ளிக்கூட நூலகளில் காணப்படும் செய்தி. அது தவிர காலில் உணர்ச்சி குறைந்து நடக்க இயலாத நிலையும் ஏற்படும் என்பது புதிய செய்தி.

பெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease PAD) என்பது மருத்துவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நோய். கால்களில் ஓடும் ரத்த நாளங்களின் தடிமன் குறைந்து, அதில் கொழுப்பு உள்படிந்து, தொடர்ந்து கால்வலியும், நடக்கவே இயலாத நிலையும் ஏற்படும். இது மிகவும் சாதாரண நோய். உலகில் எண்பது மில்லியன் பேர்களுக்காவது இந்த நோய் இருக்கலாம்.

புற ரத்தநாள நோய்க்கான காரணம் விட்டமின் ஈ குறைபாடு என்பது ஒரு சர்வேயில் இருந்து வெளிப்பட்டது. 4839 அமெரிக்கர்களின் விட்டமின் ஈ அளவு கண்காணிக்கப்பட்டது. கூடவே அவர்களது இரத்த கொலஸ்ட்ரல் இரத்த அழுத்தம் முழங்கால் -மூட்டு இந்டெக்ஸ் (Ankle-Brachial Index) போன்ற புற இரத்தநாள நோய் தொடர்பான குறிகளும் அளவிடப்பட்டன. உடலில் விட்டமின் ஈ அதிகமுள்ளவர்களிடம் மிகக் குறைவாகவே புற இரத்தநாள நோய் இருப்பது தெரிந்தது.

எப்படி விட்டமின் ஈ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது என்பதை டாக்டர் மைக்கேல் (Michael Milemad, Dept. of medicine and epidemiology & Population health science. Albert Einstin college of Medicine) ஆராய்ந்தபோது இரத்த நாளங்களின் மேல் பரப்பிலேயே விட்டமின் ஈ சென்று உட்காரக் கூடிய புரதங்கள் இருப்பதைக் கண்ணுற்றார். இதன் மூலம் விட்டமின் ஈ ஹார்மோன்களின் துணையில்லாமல் நேரடியாகவே இரத்த நாளங்களை விரித்து நிறுத்திக் காப்பாற்றும் என்பது தெரிய வருகிறது. எனவே மீன் சாப்பிடுங்கள்.
அன்னாச்சி பழம் சாப்பிடுங்க தொப்பையை குறைச்சிகோங்க


பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

தொப்பையை குறைக்கும்:

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.

பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மருந்தாகும்:

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..

அன்னாசி இலைச்சாறு வயிற்றின் பூச்சிகளை அளிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அன்னாசி இலைச்சாறு டன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.



ஆலிவ் ஆயில் எலும்புக்கு உறுதி

ஆலிவ் ஆயில் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக்காக எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் அவர்களது எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.