Thursday, 24 July 2014


நீராவி குளியல் ஏன் ? எதற்கு ? 

நமது உடலில் இயற்கை அளித்த கோடிகணக்கான துளைகள் ரத்தத்திற்கு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது 
ஆனால், நமது சுற்றுச்சுழல் காரணமாக நமது துளைகள் அனைத்தும் தூசி மற்றும் துகள்களால் அடைக்கப்பட்டு நமது தோலின் நிறம் மங்கத் தொடங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இரத்தத்திற்கு செல்லும் ஆக்சிஜனையும் தடுக்கிறது.
நீராவி குளியல் மூலமாக நமது உடம்பில் உள்ள மாற்று பொருள்கள் வெளியேற்றப்பட்டு துளைகள் திறக்கப்பட்டு இரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை பெற வழிவகுக்கும்
ஆகவே தான் நீராவி குளியல் முடிந்த பின்பு நமது தோற்ற பொலிவு மாறுவதை நம்மால் உணர முடியும் .
நீராவி குளியல் பெறுவதன் மூலமாக உடல் சோர்வையும் , மன சோர்வையும் ஒருங்கே விரட்டலாம்
தசை இறுக்கத்தை நீராவி குளியல் குறைக்கும் ஆத்ரடீஸ் ( எலும்பு சம்பந்தமான ) சதைபிடிப்பு உள்ள அவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்
உடல் எடையை குறையவும் வழி வகுக்கும் ஏனெனில் இதன் மூலம் கொழுப்பு குறையும் இரத்த ஓட்டம் சீராகும் .
தோற்ற பொலிவுடன் ஆரோக்கியத்தையும் அடைய முடியும்.
நீராவி குளியல் வாரம் ஒரு முறை செய்து கொள்ளலாம் .
சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொதிப்பு நோய் உடையவர்கள் தவிர்ப்பது நல்லது .
நீராவி குளியல் என்பது இயற்கையான பாதுகாப்பான முறையாகும் .

வெந்நீர் குடித்தால் அதிகப்படியான சதைகள் குறையும் 

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையும்
உடலில் வெந்நீர் படுவதால் அவை தேவை அற்ற கொழுப்புகள் குறைகிறது .இதனால் கொழுப்பு சதைகள் உருகி அவைகள் சரியான உடல் அமைப்பை கொடுக்கிறது.

 மாம்பழம் ஜாக்கிரதை 

தற்போதைய மாம்பழ சீசனில் எல்லோருமே மாம்பழத்தை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். கனிகளிளே மாங்கனி ஒரு தேன் கனிதான். தினசரி சாப்பிட்டாலும் திகட்டாத கனி.

தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டால் வாந்தி, பேதி, மயக்கம், சுவாசப்பிரச்சனை, தலைவலி, வயிற்றுப் பொருமல் வரும் என சாதாரணமாக இருந்து விடுவார்கள். ஆனால் இதுவல்ல காரணம்.

வியாபாரிகள் மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு என்னும் இரசாயண பொருளை போட்டு பழுக்க வைக்கின்றனர். இந்த கால்சியம் கார்பைடு CaC2 என விஞ்ஞான குறியீட்டைக் கொண்ட உடலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த பொருள் வெல்டிங் செய்ய உபயோகிக்கப்படும் ஒரு தடை செய்யப்பட்ட இரசாயணம்.

CaC2 + 2 H2O ¨ C2H2 + Ca(OH)2 என்னும் இரசாயண
இதிலிருந்து வெளிவரும் அசெட்டிலின் என்னும் வாயு காய்கள் மேல் பரவி, தோலை பழுக்கவைக்கும். இதனால் நல்ல பொன் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே வாயூறும் வர்ணத்தில் காட்சியை கொடுக்கும். மொத்தமாக லாறிகளில் ஏற்றும் போதுகூட ஓரமாய் இந்த பொட்டலங்களை போட்டு விடுவர்கள்.

இதேபோல் எத்திரல் என்னும் இன்னொரு இரசாயணத்தை தண்ணீரில் கரைத்து காய்களை அதனுள் முக்கி எடுத்தால் எல்லா காய்களும் ஒரே சீராக பழுக்கும். விற்பனைக்கு ஏதுவாக இருக்கும்.

எனவே கூடியவரை காயாக வாங்கி, வீட்டிலே பழுக்க வைப்பதுதான் சிறந்தது.

தேனின் பயன்கள் 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் இளைக்கும்.

உடல் எடை அதிகரிக்க இரு வேளை தேனை பாலில் கலந்து பருக வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.

ஒரு சிறு கரண்டியில் சிறிது தேனை எடுத்துக்கொள்ளவும். தேனின் அளவைவிட இரண்டு மடங்கு மிதமான சூடுநீரில் சிறிது கிராம்புத்தூளையும் கலந்து கால் மூட்டியில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். சில நிமிடங்களில் வலி நின்றுவிடும்.நெடுங்காலமாக வலி இருந்தால் காலையிலும், மாலையிலும் ஒரு கப் மிதமான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் தேனோடு ஒரு ஸ்பூன் கிராம்புத்தூளையும் கலந்து பருகி வந்தால், நீண்ட நாள் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். (இது படித்த தகவல்.)

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.

1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1ஸ்பூன் தேன் கொடுத்தால் பசி எடுக்கும்.

இரண்டு ஸ்பூன் தேனோடு, மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயூடன் கலந்து குடித்தால், கொலெஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும். நீண்ட நாள் கொலெஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் மூன்று முறை இதேபோல் குடித்தால் குணம் கிடைக்கும்.

இரவில் சிறு நீர் போகும் குழந்தைகளுக்கு குழந்தை தூங்கும் முன்பு ஒரு ஸூபூன் தேன் கொடுத்தால் சில நாட்களில் சரியாகும்.

பப்பாளி

மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளி பழத்தில் தான் மிகுதியான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இதய குழாய்கள் முதல் பெருங்குடல் வரை பல நன்மை இருக்கிறது. இதில் உள்ள மற்ற நன்மைகள் – இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும்.

மலட்டுத்தன்மை

பப்பாளி விதைகளை வெந்நீரில் போட்டு குடித்தால், குடும்ப கட்டுப்பாட்டிற்கு உதவி புரியும் என்று சில பேர் நம்புகின்றனர். உங்களின் சொந்த இடர்பாட்டில் இதனை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரக கோளாறு

பப்பாளி விதைகளின் பயன்களை பற்றி பல பேருக்கு தெரிவதில்லை. ஜெல்லி போன்ற தோற்றத்தை கொண்ட இதன் விதைகளில் பாக்டீரியாவை அழிக்கும் குணம் உள்ளது. சிறுநீரக கோளாறு, ஈரலை சுத்தப்படுத்துதல் மற்றும் நச்சுத் தன்மையை நீக்குதல் போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கும்.

சளியை போக்கும்

அடிக்கடி சளி பிடித்து கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே உணவில் பப்பாளியை சேர்த்துக் கொண்டால், சளி மற்றும் இருமலை நீக்க போராடும். மேலும் பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கும்.

பல்வேறு வலிகளுக்கு நிவாரணி

கீல்வாதம், எலும்புத்துளை நோய் அல்லது வேறு ஏதாவது வலிகளுக்கும் பப்பாளியை உண்ணலாம். இது வலியை குறைக்க உதவும். மேலும் அழற்சியை எதிர்க்கும் குணத்தை கொண்டுள்ளதால், வேகமாக ஆற வைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.

எடை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்கும் டயட்டை கடைப்பிடிக்கிறீர்களா? அப்படியானால் குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

செரிமான பாதை பிரச்சனை

நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டால், அவை செரிமான பாதையில் சில நேரம் சுலபமாக செல்லாது. இப்படி அடைப்பட்டிருக்கும் பொருட்கள், தேற்று தன்மையை ஏற்படுத்திவிடும். ஆகவே அதனை பப்பாளி பழம் சிறப்பாக சரிசெய்யும். உதாரணத்திற்கு, பெருங்குடலில் சளி அடைத்து இருந்தால், அதனை பப்பாளி ஜூஸ் நீக்கி விடும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால், இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்

உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை உண்ணுங்கள். அதில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது.

வைட்டமின் ஏ குறைபாடு

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.