Wednesday, 23 July 2014


ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

வாழைத்தண்டு

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில முறைகள்…

வாழைத்தண்டு சாறு:

வாழைத் தண்டு சிறுநீரகக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அது கரைந்து விடவும் கூடியது. எனவே வாழைத்தண்டுச் சாறு எடுத்து, தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்துவிடும். வாழைத்தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீரகத்துக்கு நல்லது.

பிரஞ்சு பீன்ஸ்:

இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்து விடும்.

வாழைச்சாறு:

சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலிதீன் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கன்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்துக் கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும்.

துளசி:

துளசி இலையின் சாறு எடுத்து அதனு டன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.

மாதுளை:

இந்த பழத்தின் விதையைப் பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும். அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.


செவ்வாழை


செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய். . .

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும். . .

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும். . .

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும். . .

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும். . .

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும் .

இது இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.


உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.


பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும்.
காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும்.


இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. .
மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது .
இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.


காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் குடிக்கலாம். தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது.

நாம் ஒவ்வொருவரும் நமது உடல் நலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சினிமா ஹீரோக்கள் போன்று சிக்ஸ் பேக் அடைவதற்கு இன்றைய ஆண்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் தங்களை மிகவும் வருத்தி, சரியாக சாப்பிடாமலேயே, அதனை அடைய முற்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் சிறந்த எளிய வகையில் தொப்பையை குறைத்து பிட்டாக மாறுவதற்கு வழிகள் இருக்கின்றன.


நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட் ஆப்ஸ் (Flat Abs) தான். நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைப்பதற்கும்,

ஆரோக்கியமான ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புவார்கள். தொப்பை வயிறு பெண்கள் மத்தியில் உங்கள் மதிப்பைக் குறைக்கச் செய்யும். உங்கள் பிளாட் ஆப்ஸ் உங்களின் அதிக உழைப்புத் தன்மையையும் அழகாக காண்பிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும்.
நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், இது உங்களின் உடல்நலத்தின் உறுதியையும் உங்கள் மனைவியுடன் செல்லும் போது அழகாகக் காண்பிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும். பல கணக்கெடுப்புகளின் படி, பெண்கள் தொப்பை வயிறு உள்ளவர்களை விட, ஒல்லியான உடம்புள்ள ஆண்களையே பெரிதும் விரும்புகின்றனர் என்று தெரிவிக்கின்றது.

உங்கள் வாழ்க்கையில் சில எளிதான ஊட்டச்சத்து நிரம்பிய உணவை சேர்த்து வந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். தொப்பையை குறைக்க உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகளும், நிறைய பழங்களும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயிற்றில் சேரும் செரிமானமாகாத கொழுப்பை தடுக்க எளிதாக செரிமானமாகும் உணவு வகையை சாப்பிட வேண்டும்.இத்துடன் முறையான உடற்பயிற்சியும் சேரும் போது இரட்டிப்பு பலன் கிடைக்கும் .


முட்டையின் வெள்ளைக்கரு

புரோட்டீன் மற்றும் தேவையான அமினோ அமிலங்களின் மூலமாக இருப்பது முட்டையாகும். முட்டையின் வெள்ளை கருவை உங்கள் காலை உணவில் தினமும் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அதிகமாவதோடு, நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும்.

க்ரீன் டீ

நாள் முழுவதும் சர்க்கரை அல்லாத க்ரீன் டீயை பருகவேண்டும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அது உங்கள் மெட்டபாளிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கச் செய்யும். நீங்கள் எவ்வளவு கொழுப்பை குறைகின்றீர்களோ அவ்வளவு குறைவான உடற்பயிற்சியை செய்தால் போதுமானதாகும்.

பாதாம்

தசை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவையான அதிகமான புரோட்டீன், நார்ச்சத்துடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதாமில் உள்ளது. மேலும் இது பசியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

கெட்டித்தயிர்

கெட்டித்தயிர் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகளில் சிறந்தது ஆகும். கெட்டித்தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா உங்கள் செரிப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்றில் தங்கும் கொழுப்பையும் குறைக்கும்.

கைக்குத்தல் அரிசி

தொப்பையை குறைக்க நீங்கள் தசை வலுப்படுத்தும் புரோட்டீன் நிறைந்த கார்போஹைட்ரேட்களையும் வைட்டமின்களையும் கொண்ட கைக்குத்தல் அரிசியை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

கீரைகள்

தொப்பையை குறைக்க தினமும் உங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கேல் மற்றும் லெட்யூஸ் வகைகளில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிக்களும் உள்ளது. உங்கள் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டால் அது நாள் முழுவதும் உங்கள் பசியை கட்டுப்படுத்தி அதிகம் சாப்பிடாதவாறு தடுக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

உடலை வலிமையாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் தினமும் ஒரு க்ளாஸ் வெந்நீருடன் எலுமிச்சை சாரையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.

தக்காளி

உடம்பு எரிச்சல்களை குறைக்கவும், நீர்ச்சத்தை தக்க வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகின்றது. லெப்டின் எனப்படும் புரோட்டீன் நிரம்பியுள்ளதால் உங்கள் மெட்டபாலிக் அளவை சரிசெய்து பசியையும் கட்டுப்படுத்த உதவும்.

பூண்டு

இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வயிற்றை சுத்தமாகவும் கொழுப்புச்சத்து சேர்ந்து விடாமல் தடுக்கவும், செரிமான மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.