https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1176233079073033/?type=3&theater
இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை!!
இரத்த கொதிப்பு
பெரும்பாலும் கோபம் மற்றும் மன அழுத்தத்தினால் தான் இரத்த கொதிப்பு ஏற்படுகிறது. ஏதேனும் ஓர் மாற்று செயல்களில் உங்கள் கவனத்தை குவிக்க வேண்டும். விளையாட்டு, யோகா, ஜிம் போன்ற பயிற்சிகள், இசை வாசிப்பது போன்று ஏதேனும் மாற்று செயல்களில் உங்கள் கவனத்தை குவிப்பதால் மன அழுத்தம் குறையும், மற்றும் இரத்த கொதிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணம் நமது உணவு முறையும், வேலை முறையும் தான். அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஒரு இன்ச் கூட நகராமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். கணினியில் தான்வேலை எனிலும் கூட அவ்வப்போது கொஞ்சம் இடைவேளை மற்றும் காலை, மாலை வேளைகளில் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட வேண்டியது அவசியம்.
இரத்த சர்க்கரை அளவு
பெரும்பாலும் நாம் இப்போது பருகும் சோடா பானங்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் கலப்புள்ள உணவுகள் தான் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க காரணியாக இருக்கிறது. எனவே, முடிந்த வரை இந்த இரண்டையும் தவிர்த்துவிடுங்கள்.
உடல் வேலைப்பாடுகள்
நாம் மேல் கூறியவாறு உடலுக்கு வேலை தர வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் லிப்ட் பயன்பாட்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள், பக்கத்துக்கு தெருவிற்கு போய்வர கூட வாகனங்கள் பயன்படுத்தாமல், நடந்தே சென்று வாருங்கள். இவை எல்லாம் உங்கள் உடலில் தேங்கும் கலோரிகள் கொழுப்பாக மாறாமல், கரைக்க உதவும்.
ஆரோக்கிய உணவுமுறை
தற்போது நம்மிடம் இருக்கும் பெரிய தவறான செயல்பாடு இது தான், ஆரோக்கிய உணவுமுறை. காய்கறிகளில் கூட பூச்சி மருந்து கலப்பு, கெட்டுப் போகாமல் இருக்க இரசாயன ஸ்ப்ரே என அனைத்திலும் நச்சுக்கள் கலந்துள்ளன. எனவே, தேடி, தேடி, ஆடைகள், மொபைல்கள் வாங்குவதில் இருக்கும் அதே ஈடுப்பாட்டை நல்ல உணவு உண்பதிலும் காட்டினால் உடல்நலன் நன்றாக இருக்கும்.
உடல் பருமன்
நாம் மேற்கூறிய சரியான உணவுப் பழக்கம், உடல் வேலை போன்றவற்றை பின்பற்றினாலே உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
புகை பழக்கம்
காலம், காலமாக பெரும்பாலும் நாம் கூறும் அறிவுரை இது தான். புகையை தவிர்த்துவிடுங்கள். இதன் தாக்கம் உடனே தெரியாது. திடீரென ஓர்நாள் உங்களை படுக்கையில் தள்ளும் போது தான், இதை அப்போதே விட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். எனவே, தயவு செய்து புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள்.