Thursday, 26 November 2015

முதுகு தண்டுக்கு வலிமை தரும் திரிக தடாசனம்

திரிக தடாசனம் செய்முறை:

முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு அகட்டி நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கைகளைக் கோர்த்து உள்ளங்கை வெளிப் பார்க்கும் படி தலைக்கு மேலே உயர்த்தவும். இப்போது மூச்சை இழுக்கவும்.

பின்னர் மூச்சைவெளிவிட்டு கைகளை மடக்காமல் இடுப்பை இடது பக்கம் வளைக்கவும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும். இதே போல் வலது பக்கம் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

நன்மைகள் :

இந்த ஆசனம் செய்வதால் முதுகு தண்டு வலிமை பெறுகிறது. இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது..இடுப்பில் உள்ள தேவையற்ற சதை குறைந்து மெல்லிய இடையழகை பெற முடியும். இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. கர்ப்ப பையை வலுவடையசெய்கிறது.