Friday, 3 October 2014



புருஸ்லீயின்  பயிற்சி  முறைகள் 

தேங்கி கிடந்த கராத்தே, குங்க்பூ மாதிரி கலைகளுக்கு புத்துணர்வு ஊட்டியவர் ப்ருஸ்லி. அவருக்கு முன் இதெல்லாம் பாரம்பரியமாக மாற்றம் இல்லாமல் சொல்லிகொடுக்கபட்டு வந்தது. கராத்தே படிப்பவர் குங்க்பூ படிக்க மாட்டார். குங்க்பூகாரர் கராத்தே கலைகளை கற்க மாட்டார். இருவரும் மற்ற விளையாட்டுக்கள், நவீன அறிவியலிடமிருந்து எதையும் தம் கலைக்கு புதிதாக கொண்டு வர மாட்டார்கள்.

ஆனால் ப்ரூஸ்லி கராத்தே, குங்க்பூ, ஜூடோ மாதிரி பல கலைகளில் இருந்தும் பயிற்சிமுறைகளை எடுத்து "ஜீட் குன் டோ" எனும் புதிய தற்காப்பு கலையை உருவாக்கினார். பளுதூக்கும் பயிற்சிகள் என்றாலே அன்று தற்காப்புகலைவீரர்களுக்கு அலர்ஜி. ஆனால் புரூஸ்லி பாடிபில்டிங் பயிற்சிகளை செய்தார். "பெரிய சதையே வலுவான சதை" எனவும் கூறினார்.

வயிற்று சதையை மிக முக்கியமாக கருதிய ப்ரூஸ்லி "எவ்விதமான பயிற்சிகளை செய்யவும் வயிற்று சதைகள் வலுவாக இருப்பது முக்கியம்" என்றார். சும்மா உட்கார்கையில் கூட வயிற்றுக்கு கர்ல்ஸ், லெக் ரைஸ் மாதிரி பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பார்.

ப்ரூஸ்லியின் உணவு கட்டுபாடு மிக தீவிரமானது. பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும் சீன வம்சாவளியை சேர்ந்தவர் புரூஸ்லி. அமெரிக்க பேக்கரி, மாவில் செய்த உணவுகள் அனைத்தும் குப்பை என இன்று உடல்நலம் குறித்த ஆய்வுகள் சொல்வதை அன்றே கண்டறிந்தவர் புரூஸ்லி. அதிகமான அளவில் புரதம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்டார். மூன்று வெளை உண்பதற்கு பதில் ஆறு வேளைகள் சின்ன சின்ன அளவுகளில் உண்டார்.

புரூஸ்லி தினமும் மூன்று மணிநேரம் உடல்பயிற்சி செய்வார். காலை 7 முதல் 9 மணீவரை ஓடுதல், சைக்கிள், ப்ளெக்சிபிளிட்டி பயிற்சிகளை செய்வார். அதன்பின் 11 மணி முதல் 12 மணிவரை பளுதூக்குதல் மற்றும் சைக்கிளிங் பயிற்சிகளை செய்வார்.

தினமும் ஆறுமைல் தூரத்தை 45 நிமிடத்தில் ஓடிகடப்பார் புரூஸ்லி.

இத்தகைய பயிற்சிகளால் அமெரிக்காவில் நடந்த அனைத்து கராத்தே போட்டிகளிலும் புரூஸ்லியும் அவரது சீடர்களும்மே வென்று வந்தார்கள்.

புரூஸ்லியால் கராத்தே, குங்க்பூ மாதிரி தற்காப்பு கலைகள் சீனாவிலும், உலகம் முழுவதிலும் மீண்டும் உயிர்த்து எழுந்தன. புரூஸ்லி உருவாக்கிய ஜீட் குண்டோ இன்று சீன அரசால் பல்கலைகழக்ங்களில் கற்பிக்கபட்டு வருகிறது.


ஆப்  க்ரன்ச்  பயிற்சி 

வயிற்று சதை குறைய பல உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தாலும் இது விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இதை வீட்டில் வாங்கி வைத்தும் செய்யலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் நிபுணரின் அறிவுரையின் படி மட்டுமே தொடங்க வேண்டும்.

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும்.

1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5 தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை இடையழகைப் பெறலாம்.

ப்ளோர் பயிற்சி 

தற்போதுள்ள நவீன யுகத்தில் இனம் வயதினர் நடப்பதையே மறந்து விட்டனர். பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனத்தையே நாடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் சிறிது தூரம் நடந்தாலும் அவர்களுக்கு கால்கள் வலி எடுக்க ஆரம்பிக்கும். இத்தகைய கால் வலி போக அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பணத்தை செலவிடுகின்றனர்.

ஆனால் வீட்டிலேயே இந்த கால்களுக்கு வலிமை தரும் பயிற்சியை சுலபமாக செய்ய முடியும். இந்த பயிற்சிகளை தினமும் வீட்டில் தொடர்ந்து செய்து வந்தால் கால் வலி தீர்வதோடு, கால்களும் வலிமை பெறும். கால்கள் வலிமை பெற எளிய பயிற்சியை பார்க்கலாம்.

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக்கொண்டு கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் நேராக மேல் நோக்கி தூக்கவும். அப்போது உங்கள் கால்கள் 90 டிகிரியில் நேர் கோட்டில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை கீழே இறக்கி பழைய நிலைக்கு வர வேண்டும்.

பின்னர் இடது காலை நேராக நீட்டி வலது காலை 90 டிகிரியில் மேலே தூக்க வேண்டும். அப்போது வலது கால் பாதத்தை இடது கையால் தொட (படத்தில் உள்ளது போல்)வேண்டும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்து பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதே போல் வலது காலை நேராக நீட்டி இடது காலை 90 டிகிரியில் மேலே தூக்க வேண்டும். இடது கால் பாதத்தை வலது கையால் தொட வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு கால்கள் மாற்றி 10 முறை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் 25 முறை செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. கால்கள், தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைய இந்த பயிற்சி உதவுகிறது.

பெக் டெக்  ப்ளைஸ் பயிற்சி 

இதற்கென உள்ள பிரத்யேகக் கருவியில் நேராக அமரவேண்டும். அதன் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு, தோள்பட்டையை நேராக வைக்க வேண்டும். 

பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடி, கைப்பிடியை மெதுவாகப் பக்கவாட்டில் தள்ளிக் கொண்டுசென்று தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும். 

இதுவும் மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சி.


பெண்கள் மேற்கொள்ள தகுந்த பயிற்சி 

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை.. 
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி. 
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி. 
3) யோகாசன பயிற்சிகள். 
4) ஸ்கிப்பிங் பயிற்சி 

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்க இவற்றை செய்யலாம்.

• சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

• இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

• பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

• குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.


செய்முறை...முதலில் விரிப்பின் மேல் காலை லேசாக அகட்டி (1 அடி இடைவெளி விட்டு) நிற்கவும். வலது கையை மடக்கி வலது தொடையின் மீது வைக்கவும். பின்னர் மெதுவான இடது கையை நீட்டியவாறு வலது பக்கம் உங்களால் முடிந்த அளவு வளைய வேண்டும். இவ்வாறு வளைக்கும் போது இரண்டு கால் முட்டிகளும் மடங்க கூடாது. இதே போல் இடது புறம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முறை செய்யலாம். நன்கு பழகிய பின்னர் 25 அல்லது அதற்கு மேல் செய்து வந்தால்
நல்ல பலன் கிடைப்பதை காணலாம்

பயன்கள்..

இந்த பயிற்சி செய்வதால் கால் நரம்புகள் வலுவடையும். இடுப்பிலும் தொடைப்பகுதிகளிலும் உள்ள அளவுக்கு அதிகமான தசைகள் குறையும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் பிரசவ நேரத்தில் தசைகள் நெகிழ்வடைந்து பிரசவம் சுலபமாகும்.