Wednesday, 8 October 2014


அயன்மேன் பயிற்சி 


கால் விரல்கள் மற்றும் கைகளால் உடலைத் தாங்கியபடி தரையில் குப்புறப் படுக்க வேண்டும். தலை நேராக இருக்கட்டும். இப்போது, கைகளை உயர்த்தி இடுப்பை வளைவுபோல உயர்த்த வேண்டும். தலை, தரையைப் பார்த்தபடி தாழ்ந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும். ஓரிரு விநாடிகள் இப்படியே இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

இதேபோன்று 8 முதல் 12 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

முதலில் ஓரிரு விநாடிகள் பயிற்சி செய்து பழகிய பிறகே, இதை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யும்போது இரும்பைப் போன்ற வலிமையான உடல்கட்டு கிடைக்கும். மேல் உடல், நடுப்பகுதி, கீழ் உடல் என்று அனைத்துப் பகுதித் தசைகளையும் வலிமையாக்கும்.

நாள் முழுவதும் உட்கார்ந்தே இருப்பதால், முதுகுப்பகுதி மற்றும் கால் பகுதிகளில் ஏற்படும் அழுத்தத்தால் தசைகள் கடினப்படுவதும் தடுக்கப்படும்.