Wednesday, 14 October 2015

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching) பலரும் செய்வதில்லை. அதன் உன்னத அருமை யாருக்கும் தெரிவதில்லை.

தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்... இவற்றைச் செய்வதற்கு முன்பும்   (Before  warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) எலும்புகளின் அனைத்து இணைப்புகளையும், எல்லா தசை மண்டலங்களையும், உடலின் தோலையும் சுருக்கி - நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.

இது தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து (Flexibility) உங்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை. நன்றாக உடற்பயிற்சி செய்யும் பலர், என்னிடம் வந்து, ‘சார், உடற்பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் களைப்படைகிறேன். இரவு உடல் வலியால் நன்றாக உறங்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்.

நீங்கள் பயிற்சி செய்யும் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோ எப்போதும் 200 சதவிகிதப் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்கள். நன்றாக உறங்குகிறார்கள். முந்தைய நாளைவிட அடுத்த நாள் மேலும் கடுமையான பயிற்சியில் ஈடுபட மனதளவில் உடலளவில் தயாராக உள்ளனர்.
.....................
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1141223562573985/?type=3&theater