Wednesday, 30 July 2014


கொழுப்பை குறைக்கும் முதல் 10 உணவுகள் 

ஓட்ஸ் : 

ஓட்ஸ் சுவை மிகுந்தது மட்டுமல்ல சக்தி வாய்ந்ததும் கூட இதில் உள்ள நார்சத்து நமது கொழுப்பை சமபடுத்த உதவும்.

முட்டை :

முட்டையில் அதிக அளவு புரதசத்து உள்ளது, குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
முட்டை நல்ல சதைபிடிப்பை கொடுக்கும் உடலுக்கு நல்ல கொழுப்பை தரும்.

ஆப்பிள் :

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆப்பிளில் உள்ள பெக்டின் கொழுப்பை குறைக்க உதவும்.

பச்சை மிளகாய் :

பச்சை மிளகாயில் காப்சைசின் உள்ளது அது அதிக கொழுப்பை தடுக்கும் மற்றும் அதன் காரத்தன்மை கலோரிகளை விரைவில் எரிக்கும் .

பூண்டு :

பூண்டில் உள்ள அலிசினால் வலிப்பு வராது, மாரடைப்பு வராது, இதய நோய் அண்டாமல் காக்கும். இரத்த அழுத்தம் குறையும், புற்று நோய் வராமல் தடுக்கும். கொழுப்பை குறைக்கும், கெட்ட கொழுப்பை வெளியேற்றும்.

தேன் :

தேன் கொழுப்பை விரட்ட வல்லது. சூடு தண்ணிரில் தேனை கலந்து தினமும் தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

கிரீன் டீ :

கிரீன் டீ உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது. இதில் உள்ள ஆண்டி - ஆக்ஸ்சிடன்ட்ஸ் எடையை கட்டுக்குள் வைக்கும். தினமும் காலை மாலை என் இருவேளைகளில் கிரீன் டீ பருகவும்.

கோதுமை :

கோதுமை மெட்டோ பாலிசத்தை அதிகரிக்கும் இதன் மூலம் உங்களின் எடை குறையும். எனவே உங்கள் மெட்டோபாலிசம் அதிகரிக்க கோதுமையை தினமும் உபயோகிக்கவும். மெட்டோபாலிசம் என்றால் வளர்சிதை மாற்றம் என்பதாகும்.

தக்காளி :

தக்காளி கொழுப்பை விரைவில் எரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். எனவே தக்காளியை தவற விடாதிர்கள்

டார்க் சாக்லேட் :

இதில் உள்ள பிளவோநாய்ட் ( இரத்த நாளங்கள் சிறப்பாய் செயல்பட வைட்டமின் சி ஐ தக்க வைக்க உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க வல்லது ) உடலின் ஒவ்வாமையை குறைக்கும். இது உடல் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். மனசோர்வை விரட்ட சாக்லேட் சிறந்தது .

பலம் தரும் பலாக்கொட்டை

நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். 

அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது.

இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான்பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது.

இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன.

இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம்.

தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20, உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.

பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.

ஞாபக மறதியை தடுக்கும் சிறந்த உணவுகள் 

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.

தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும்.

மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.

தானியங்கள்:

மற்றும் நட்ஸ் தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

கடல் சிப்பி:

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

ப்ளூபெர்ரி:

ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி:

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மீன்கள்:

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

தக்காளி:

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

முட்டைகள் முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

ப்ராக்கோலி:

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

மாட்டுக்கறி:

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

தயிர்:

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சாக்லெட்:

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

காபி:

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி:

மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? 

அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில்
ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.

நாள் 1

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

நாள் 2

இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

நாள் 3

மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நாள் 4

நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்.

நாள் 5

இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாள் 6

ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

நாள் 7

இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.