Tuesday, 5 August 2014


வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா ?
வெயில் காலம் ஆரம்பிக்கப் போவதால், வெயிலானது சருமத்தில் அதிகமாகப் படும். இதனால் இதுவரை அழகாக பராமரித்து வந்த சருமமானது, வெயிலில் சுற்றும் போது நிறம் மாறிவிடும்.
இவ்வாறு சருமத்தின் நிறம் மாறுவதற்கு பெரும் காரணம், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் சரும செல்களை பாதிப்பதே ஆகும். மேலும் இத்தகைய நிலையானது நீடித்தால், சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.


எனவே இத்தகைய நிலையை மாற்றுவதற்கு முறையான பராமரிப்பானது கோடைகாலத்தில் அதிகம் தேவைப்படும். குறிப்பாக இத்தகைய பழுப்பு நிற சருமம் ஒருவருக்கு ஏற்படுவதற்கு, குறைந்தது 15 நிமிடம் வெயிலில் சுற்றினாலே போதும். அதிலும் இந்த சரும நிற மாற்றத்தைப் போக்குதற்கு நிறைய அழகுப் பொருட்கள் மார்கெட்டில் விற்கப்படுகிறது. இருப்பினும் எந்த பலனும் இல்லை. ஏனெனில் அதில் கெமிக்கல் இருப்பதால், பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே இதற்கு ஒரே வழி இயற்கை முறை. அதிலும் டீயை வைத்து எளிதில் சரிசெய்யலாம். ஏனெனில் தேயிலையில் டேனிக் ஆசிட் இருப்பதால், அவை சரும செல்களை மென்மையாக்கி, சரும நிறத்தை மாறாமல் தடுக்கும். சரி, இப்போது தேயிலையை வைத்து எப்படி பழுப்பு நிற சருமத்தை சரிசெய்வது என்று பார்ப்போமா!!!

* தேயிலை பையை சூடான நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின் ஒரு துணியை அதில் நனைத்து, சருமத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் பழுப்பு நிற சருமமானது போய்விடும்.

* தேநீர் தயாரிக்கும் போது,தேயிலை பையை பயன்படுத்தினால், பயன்படுத்தியப் பின் அதனை தூக்கிப் போடாமல், குளிர வைத்து, பின் அந்த பையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* தேயிலை குளியல் கூட எடுக்கலாம். அதற்கு சிறிது தேயிலை பையை குளிக்கும் நீரில் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்துவிட்டு, பின்னர் குளிக்க வேண்டும். இதனாலும் பழுப்பு நிற சருமத்தைப் போக்கலாம்.

* கறுப்பு தேயிலை யும் பழுப்ப நிற சருமத்தைப் போக்குவதில் மிகவும் சிறந்தது. அதிலும் சாமந்தி பூ தேயிலை (chamomile tea), சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து, சருமத்தை நிறம் மாறாமல் வைக்கும்.

* தேயிலை பையை பாலில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் சரும மாற்றத்தை தடுக்கலாம். இதுவும் ஒரு வகையான பழுப்பு நிற சருமத்தைப் போக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். இவையே டீயை வைத்து செய்யக்கூடிய ஒரு வழியாகும். இதைப் போன்று வேறு ஏதாவது தேயிலை யை வைத்து செய்யக்கூடிய முறை உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர ?

நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லையே?’ என்றுதானே
கூறுகிறீர்கள்? கதிரியக்கத்தாக்கம் வேண்டுமானால் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவது உண்மை.

அவை பற்றி… காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சம் 90 டெசிபல்கள் வரை சத்தங்களைக் கேட்கலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும்.

தொடர்ச்சியாகக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதால் காதின் கேட்புத் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் செல்போன் உபயோகிக்கும்போது என்ன நடக்கிறது தெரியுமா? சாதாரணமாக செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக்கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம்.

அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பிருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாகப் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக அரைமணி நேரம், ஒரு மணி நேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தால் நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படும். தவிர, செல்போனில் இருந்து வெப்பமும், வெப்பக் கதிர்வீச்சும் வெளிப்படுகின்றன.

நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால் இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்குள்ளே இருக்கும் நுண்ணிய நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல செல் போனில் விட்டுவிட்டு சிக்னல் கிடைக்கும் போது மின்காந்த அலைகளின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.

இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில், தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம். செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ‘ஹேண்ட்ஸ் பிரீ’ உபயோகித்துப் பேசுவதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.


தொப்பை குறைய எளிய பயிற்சி 

தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது.

இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.

கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது.

இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும்.
பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம்.

எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.