Friday, 1 August 2014


நோய் எதிர்ப்பு சக்தி வேண்டுமா ? 

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:
வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்: தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை <உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.

முழங்கால் வலி தாங்க முடியலையா இந்த உடற்பயிற்சி தினமும் செய்யுங்க. 

நமது உடலில் மிகவும் அதிகமாக காயம் படும் பாகமாக முழங்கால்கள் உள்ளன. இந்த காயங்கள் விபத்தினாலோ அல்லது அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதாலோ என ஏதாவதொரு காரணங்களால் ஏற்படலாம். தசை நார்கள் கிழிவதாலோ அல்லது காயங்களாலோ கூட முழங்கால் வலிகள் ஏற்படலாம். 

ேலும், ஒவ்வொரு நாளும் நாம் நடக்கும் போதும், குதிக்கும் போதும், படிகளில் ஏறும் போதும் என பல்வேறு செயல்பாடுகளின் போதும் நிறைய அழுத்தங்களையும் முழங்கால்கள் எதிர்கொள்கின்றன. தினமும் முழங்கால்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களும், கிழிதல்களாலும் தசைநார்கள் மற்றும் மூட்டுகளில் வலிகள் வரக் கூடும். நாள்பட்ட மூட்டு வலி இருக்கா? முதல்ல இத படிங்கப்பா... தினமும் உடற்பயிற்சி செய்வது, நமது உடலுக்கு பொதுவாகவே நல்ல விஷயமாகும்.

அந்த வகையில் முழங்கால்களுக்கு என்றே பிரத்யோகமான உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சிகளை யாவரும் மிகுந்த ஒழுக்கத்துடன் செய்து வந்தால், முழங்கால் வலிகளில் இருந்து விடுதலை பெற முடியும்.

கைகளில் வரும் மூட்டு வலியை குணப்படுத்தும் 6 இயற்கை வழிகள்!!! இந்த கட்டுரையில் முழங்கால் வலிகளை குறைப்பதற்கான சில பொதுவான உடற்பயிற்சிகள் குறித்து தகவல்களை கொடுத்துள்ளோம். இந்த பயிற்சிகளை செய்யத் துவங்கும் முன்னர், மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

நீட்டி மடக்குதல் (Stretching)

தசைகளை நீட்டி மடக்குவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும், வலி நிவாரணியாகவும் உள்ளது. முழங்கால்களுக்கு ஏற்ற பல்வேறு நீட்டி மடக்கும் பயிற்சிகள் உள்ளன. ஹார்ம்ஸ்ட்ரிங் ஸ்ரெட்ச்சிங் (Hamstring stretching) என்ற பயிற்சியை உங்களுடைய முழங்கால் தசைகள் தளர்வாக இருக்கும் போது செய்யலாம். அதற்கு உங்களுடைய கால்களில் ஒன்றை முன்னால் வைத்து, மற்றொரு காலின் முழங்காலை மடக்கியபடி அழுத்தத்தை உணரும் வரையிலும் நிறுத்தி வையுங்கள். இந்த பயிற்சி மிகவும் பலன் தரும்.

யோகாசனம் (Yoga)

முழங்கால்களுக்கு ஏற்ற மற்றுமொரு பயிற்சி யோகசனங்கள் ஆகும். யோகாசனங்கள் தசைகளை மென்மையாக ஓய்வு நிலைக்கு கொண்டு சென்று, அழுத்தம் அல்லது இழுவையை குறைக்கின்றது. நமது கால்கள் மற்றும் முழங்கால்களை நிலைப்படுத்தக் கூடிய பல்வேறு யோகாசனங்கள் உள்ளன. பிற உடற்பயிற்சிகளை விட சிறந்த விளைவுகளை நெடுநாட்களுக்குத் தருபவையாக யோகாசனங்கள் உள்ளன. தினந்தோறும் 'சூரியநமஸ்காரம்' செய்து வந்தால் முழங்கால் வலியை பறந்தோடச் செய்ய முடியும்.

ஸ்டெப்-அப் (Step Up)

இதயத்திற்கு மிகவும் ஏற்றதாக ஸ்டெப் அப் அல்லது ஸ்டெப்பிங் பயிற்சி உள்ளது. இதயத்துடிப்பைத் தூண்டவும், உடலின் வெப்பத்தை அதிகரிக்கவும் மற்றும் நமது உடல் முழுமையையும் சக்தியூட்டம் பெறச் செய்யவும் இந்த பயிற்சி உதவுகிறது. ஸ்டெப் அப் பயிற்சியை செய்யும் போது முழங்கால்களை மடக்க வேண்டாம். அவற்றை நேராகவும், உறுதியாகவும் வைக்கவும். சீரான வேகத்தில், ஒரு நிமிடத்திற்கு ஸ்டெப் அப் பயிற்சியை செய்து வந்தால் முழங்கால்களும் பலன் பெறும். ஸ்டெப் அப் பயிற்சியின் போது முழங்கால்களும் தயார் செய்யப்படுவதால் அவற்றின் அழுத்தங்கள் குறைக்கப்படுகின்றன. முழங்கால் காயங்களை குணப்படுத்த கிடைத்துள்ள உடனடி பயிற்சிகளில் ஒன்றாக ஸ்டெப் அப் உள்ளது.

சைக்கிளிங்/பைக்கிங்

வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ சென்று பைக்கிங் செய்வது முழங்கால் வலியை குணப்படுத்த செய்ய வேண்டிய பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த பயிற்சியின் போது வலி குறைய வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய கால்களை சரியான முறையில் வைத்திருங்கள். மேலும் சைக்கிளிங் பயிற்சியை 10-15 நிமிடங்களுக்கு செய்து வரலாம். இந்த பயிற்சியின் மூலம் கால்கள் மற்றும் முழங்கால்களின் வலிமை அதிகரிக்கும். முழங்கால்களின் தசை நார்கள் மற்றும் சதைகள் ஆகியவை வலிமையடையவும் மற்றும் வலி மெதுவாக குறையவும் சைக்கிளிங் பயிற்சி உதவுகிறது.

மேட் பயிற்சிகள் (Mat Exercises)

கால்களை தூக்குதல், முழங்கால்களை தூக்குதல் போன்ற சில மேட் பயிற்சிகளின் போது தசைகள் நன்றாக நீட்டப்படுவதால், நமது முழங்கால்களின் வலிகள் பெருமளவு குறைகின்றன. மேட் பயிற்சிகளை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். கால்களை தூக்கும் போது முழங்கால்களை மடக்க வேண்டாம். சில அங்குலங்களுக்கு கால்கள் உயரும் வரை பொறுத்திருங்கள். இது முழங்கால் காயங்களுக்கு ஏற்ற சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும்.