ப்ளோர் பயிற்சி
தற்போதுள்ள நவீன யுகத்தில் இனம் வயதினர் நடப்பதையே மறந்து விட்டனர். பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனத்தையே நாடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் சிறிது தூரம் நடந்தாலும் அவர்களுக்கு கால்கள் வலி எடுக்க ஆரம்பிக்கும். இத்தகைய கால் வலி போக அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பணத்தை செலவிடுகின்றனர்.
ஆனால் வீட்டிலேயே இந்த கால்களுக்கு வலிமை தரும் பயிற்சியை சுலபமாக செய்ய முடியும். இந்த பயிற்சிகளை தினமும் வீட்டில் தொடர்ந்து செய்து வந்தால் கால் வலி தீர்வதோடு, கால்களும் வலிமை பெறும். கால்கள் வலிமை பெற எளிய பயிற்சியை பார்க்கலாம்.
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக்கொண்டு கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் நேராக மேல் நோக்கி தூக்கவும். அப்போது உங்கள் கால்கள் 90 டிகிரியில் நேர் கோட்டில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை கீழே இறக்கி பழைய நிலைக்கு வர வேண்டும்.
பின்னர் இடது காலை நேராக நீட்டி வலது காலை 90 டிகிரியில் மேலே தூக்க வேண்டும். அப்போது வலது கால் பாதத்தை இடது கையால் தொட (படத்தில் உள்ளது போல்)வேண்டும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்து பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும்.
இதே போல் வலது காலை நேராக நீட்டி இடது காலை 90 டிகிரியில் மேலே தூக்க வேண்டும். இடது கால் பாதத்தை வலது கையால் தொட வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு கால்கள் மாற்றி 10 முறை செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் 25 முறை செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. கால்கள், தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைய இந்த பயிற்சி உதவுகிறது.
No comments:
Post a Comment