Thursday, 24 December 2015

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள்!

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான டயட் மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது.

ஆனால் எங்கும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளைக் கொண்ட சூழலில் வாழ்வதால், நம்மை அறியாமலேயே நாம் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும் மனக்கட்டுப்பாடு மற்றும் போதிய உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளைக் குறைக்கலாம். அதுவும் உணவுகளைக் கொண்டே கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும்.

இங்கு நம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் டாப் 5 உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உணவில் சேர்த்து உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஒருவர் தங்கள் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறையும். எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நட்ஸ்

நட்ஸ்களான வால்நட்ஸ், பாதாம் போன்றவை இதய நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். ஏனெனில் இவைகளில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும். ஆனால் இந்த நட்ஸ்களை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது தான் நல்லது.

மீன்

மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மேலும் இது இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதையும் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், ஓட்ஸை அன்றாடம் உட்கொண்டு வருவது நல்லது.

பூண்டு



தினமும் 2 பல் பூண்டை பச்சையாக காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

Wednesday, 23 December 2015


https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1176233079073033/?type=3&theater

இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை!!

இரத்த கொதிப்பு

பெரும்பாலும் கோபம் மற்றும் மன அழுத்தத்தினால் தான் இரத்த கொதிப்பு ஏற்படுகிறது. ஏதேனும் ஓர் மாற்று செயல்களில் உங்கள் கவனத்தை குவிக்க வேண்டும். விளையாட்டு, யோகா, ஜிம் போன்ற பயிற்சிகள், இசை வாசிப்பது போன்று ஏதேனும் மாற்று செயல்களில் உங்கள் கவனத்தை குவிப்பதால் மன அழுத்தம் குறையும், மற்றும் இரத்த கொதிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணம் நமது உணவு முறையும், வேலை முறையும் தான். அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஒரு இன்ச் கூட நகராமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். கணினியில் தான்வேலை எனிலும் கூட அவ்வப்போது கொஞ்சம் இடைவேளை மற்றும் காலை, மாலை வேளைகளில் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட வேண்டியது அவசியம்.

இரத்த சர்க்கரை அளவு

பெரும்பாலும் நாம் இப்போது பருகும் சோடா பானங்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் கலப்புள்ள உணவுகள் தான் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க காரணியாக இருக்கிறது. எனவே, முடிந்த வரை இந்த இரண்டையும் தவிர்த்துவிடுங்கள்.

உடல் வேலைப்பாடுகள்

நாம் மேல் கூறியவாறு உடலுக்கு வேலை தர வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் லிப்ட் பயன்பாட்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள், பக்கத்துக்கு தெருவிற்கு போய்வர கூட வாகனங்கள் பயன்படுத்தாமல், நடந்தே சென்று வாருங்கள். இவை எல்லாம் உங்கள் உடலில் தேங்கும் கலோரிகள் கொழுப்பாக மாறாமல், கரைக்க உதவும்.

ஆரோக்கிய உணவுமுறை

தற்போது நம்மிடம் இருக்கும் பெரிய தவறான செயல்பாடு இது தான், ஆரோக்கிய உணவுமுறை. காய்கறிகளில் கூட பூச்சி மருந்து கலப்பு, கெட்டுப் போகாமல் இருக்க இரசாயன ஸ்ப்ரே என அனைத்திலும் நச்சுக்கள் கலந்துள்ளன. எனவே, தேடி, தேடி, ஆடைகள், மொபைல்கள் வாங்குவதில் இருக்கும் அதே ஈடுப்பாட்டை நல்ல உணவு உண்பதிலும் காட்டினால் உடல்நலன் நன்றாக இருக்கும்.

உடல் பருமன்

நாம் மேற்கூறிய சரியான உணவுப் பழக்கம், உடல் வேலை போன்றவற்றை பின்பற்றினாலே உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

புகை பழக்கம்

காலம், காலமாக பெரும்பாலும் நாம் கூறும் அறிவுரை இது தான். புகையை தவிர்த்துவிடுங்கள். இதன் தாக்கம் உடனே தெரியாது. திடீரென ஓர்நாள் உங்களை படுக்கையில் தள்ளும் போது தான், இதை அப்போதே விட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். எனவே, தயவு செய்து புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள்.

Friday, 11 December 2015

இனிமையான பின்னணி இசையோடும், பயிற்சியாளர் கட்டுப்பாடுடன் எண்ணும் எண்களின் வரிசைப்படியும் மேலும் கீழுமாக, இடம் வலமாக, வலம் இடமாக, சிறிது நடப்பது போல, சிறிது ஓடுவது போல, சிறிது குதிப்பது போல, சிறிது உட்கார்ந்து எழுந்திருப்பது போல, சிறிது படுத்து எழுந்திருப்பது போல, கைகள், கால்களை சிறிய அசைவுடன் தொடங்கி பின்பு வேகமாக அசைத்து, சுற்றுவதின் மூலம் வேர்வையின் மழையில் நனைந்து,

 ஒரு மாபெரும் நடனப்பயிற்சி முடிந்தது போல எண்ணி, இன்பமான களைப்போடு, தண்ணீர் அருந்திக்கொண்டு மெல்லிய துண்டால் வியர்வையை அகற்றி பெருமூச்சு விடும் சுகம் கிடைப்பது ஏரோபிக்ஸில் தான்! உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது - ஏரோபிக்ஸ்!

ஏரோபிக்ஸின் பயன்கள் 

* இதயத்தை வலுப்படுத்துகிறது.
* அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்துகளை அகற்றுகிறது.
* உடலை மாசுபடுத்தும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.
* தேவைக்கு அதிகமான கலோரிகள்  எரிக்கப்படுகிறது.
* அதிகமான ஆக்சிஜனை  உடலில் செலுத்துகிறது.
* ரத்த ஓட்டம் சீராகவும் அதிகரிக்கவும் உதவுகிறது.
* முக்கியமாக வயிற்றுப் பகுதியில் உண்டாகும் பெரும் தொப்பையை குறைக்க உதவுகிறது
* உடல் தசைகளை இறுக்கி
உறுதியாக்குகிறது.
* எடை குறைத்து, அதன் மூலமாக கால் மூட்டுகளில் உண்டாகும் அழுத்தம் /

https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1168670419829299/?type=3&theater

Thursday, 10 December 2015

உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்
உடல் எடையை குறைக்க பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியவை. அதுவும் இந்த பயிற்சிகளை ஜிம்முக்கு சென்று தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியே இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
1. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் நாற்காலியில் உட்காருவதை போல் கால்முட்டியை பாதிவரை மடித்த நிலையில் இருக்கவும். அடுத்து வலது காலில் மேல் வலது கையை ஊன்றி இடது காலை பக்கவாட்டில் நீட்டியபடி படத்தில் உள்ளபடி வலது பக்கமாக சாயவும்.
இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் செய்யவும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம்.
2. இந்த பயிற்சி அனைவருக்கும் தெரிந்தது. விரிப்பில் கைகளை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். பின்னர் தரையில் தலை படாமல் படத்தில் உள்ளபடி எத்தனை முறை குனிந்து நிமிர முடியுமோ அத்தனை முறை செய்யலாம். இந்த பயிற்சி தொப்பை குறைய செய்யும் முக்கிய பயிற்சியாகும்.
3. விரிப்பில் மல்லாந்து படுத்து கொண்டு கைகளால் தலையை தாங்கி கொள் வேண்டும். கால்களை முட்டிவரை மடக்கி கொள்ள வேண்டும். இப்போது வலது கை கையால் இடது காலையும், இடது கையால் வலது காலையும் மாறி மாறி தொட வேண்டும்.
இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். இந்த பயிற்சி வயிற்று பகுதி சதையை குறைய செய்யப்படும் பயிற்சியாகும்.

Sunday, 6 December 2015

பீட்ரூட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

பீட்ரூட் கிழங்கு வகை உணவுகளில் ஓர் உணவு வகையாகும். இது நீரிழவு நோயாளிகளுக்கு ஓர் சிறந்த உணவு என கூறப்படுகிறது. பீட்ரூட்டை குழம்பு, சாம்பார், பொரியல் ஜூஸ் மட்டுமின்றி வெறுமென வேக வைத்தும் கூட சாப்பிடலாம். இதில் புரதம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி-6, மற்றும் இரும்புச்சத்துக்களும் இருக்கின்றன.

இதில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை என்பதால் உடல் எடை குறைக்க விரும்புவோர் இதை தாராளாமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பீட்ரூட்டில் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் தன்மையும் உள்ளது, எனவே, உடல் பாரும் பிரச்சனையால் அவதிப்படும் படும் நபர்களுக்கு பீட்ரூட் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது.....

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அவர்களது உணவுமுறையில் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்வதால் நல்ல தீர்வுக் காண முடியும்.

கொழுப்பை கரைக்கும்

உடலுக்கு கேடு விளைவிக்கும் எல்.டி.எல் கொழுப்பை கரைக்க பீட்ரூட் உதவுகிறது.

புத்துணர்ச்சி

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் உணவுகளில் பீட்ரூட் ஓர் சிறந்து உணவாகும்.

நீரிழிவு

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஓர் சிறந்த உணவு. இது சர்க்கரை அளவை உடலில் கட்டுப்படுத்த வெகுவாக உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலம் நன்றாக இருக்க பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது உடல் வலுவை பாதுகாக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

மேலும் பீட்ரூட் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் சீரிய முறையில் பயனளிக்கிறது.