உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்
உடல் எடையை குறைக்க பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியவை. அதுவும் இந்த பயிற்சிகளை ஜிம்முக்கு சென்று தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியே இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
1. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் நாற்காலியில் உட்காருவதை போல் கால்முட்டியை பாதிவரை மடித்த நிலையில் இருக்கவும். அடுத்து வலது காலில் மேல் வலது கையை ஊன்றி இடது காலை பக்கவாட்டில் நீட்டியபடி படத்தில் உள்ளபடி வலது பக்கமாக சாயவும்.
இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் செய்யவும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம்.
2. இந்த பயிற்சி அனைவருக்கும் தெரிந்தது. விரிப்பில் கைகளை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். பின்னர் தரையில் தலை படாமல் படத்தில் உள்ளபடி எத்தனை முறை குனிந்து நிமிர முடியுமோ அத்தனை முறை செய்யலாம். இந்த பயிற்சி தொப்பை குறைய செய்யும் முக்கிய பயிற்சியாகும்.
3. விரிப்பில் மல்லாந்து படுத்து கொண்டு கைகளால் தலையை தாங்கி கொள் வேண்டும். கால்களை முட்டிவரை மடக்கி கொள்ள வேண்டும். இப்போது வலது கை கையால் இடது காலையும், இடது கையால் வலது காலையும் மாறி மாறி தொட வேண்டும்.
இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். இந்த பயிற்சி வயிற்று பகுதி சதையை குறைய செய்யப்படும் பயிற்சியாகும்.
No comments:
Post a Comment