Thursday, 28 January 2016

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி


இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது.

இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது கரையாமல் அப்படி தங்கி விடும். இதனால் தடித்து மிக அசிங்கமாக காணப்படும்,

இதுதவிர மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த பருமனை மிக எளிதான உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

* ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். * தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படியே தொடர்ந்து 15 தடவைகள் செய்து வந்தால் இடுப்பு பருமனை குறைக்கலாம்.

Wednesday, 27 January 2016

ஏன் தினமும் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்?

உடலின் பெரும் பகுதி நீரால் நிறைந்தது. மேலும் உடலுறுப்புக்கள் சீராக செயல்படுவதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவரால் 40 நாட்கள் வரை உணவின்றி வாழ முடியும், ஆனால் நீரின்றி வாழ முடியாது. 2 நாட்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலே, பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே உடல் ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டியது அவசியம்.

குறிப்பாக இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தினமும் இரவில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உடலில் நீர்ச்சத்து சீராக வைத்துக் கொள்ளப்படும்

உடல் வறட்சியடைவதைத் தடுக்க சிறந்த வழி தண்ணீர் குடிப்பது தான். அதிலும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து சீராகப் பராமரிக்கப்படும். பகலில் தண்ணீர் குடிப்பது போல, இரவில் நம்மால் தண்ணீர் குடிக்க முடியாது. இருந்தாலும் இரவில் உடலுறுப்புக்களின் செயல்பாடு அதிகம் இருக்காது என்பதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும் தூங்குவதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், மறுநாள் காலையில் எழும் போது நல்ல புத்துணர்ச்சியை உணரக்கூடும்.

டாக்ஸின்கள் நீங்கும்

தண்ணீரை விட உடலை சுத்தம் செய்ய சிறந்தது எதுவும் இருக்க முடியாது. எனவே தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதுடன், இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடியுங்கள். இதனால் பகல் நேரத்தை விட, இரவில் உடல் சுத்தமாவதற்கு போதிய அளவு நேரம் கிடைப்பதால், டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் வேகமாக சுத்தமாகும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம். எப்படியெனில் இரவில் குடிக்கும் தண்ணீர் உடலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இரவில் உடல் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருப்பதால், தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளுக்குச் செல்லும்.

எடையைக் குறைக்க உதவும்

தண்ணீரில் கலோரிகள் சுத்தமாக இல்லை, சுவையில்லை மற்றும் வேறு எதுவும் இல்லை. ஆனால் இது உடலை சீரான இயக்கத்தில் செயல்பட செய்யும். அதிலும் இரவில் குளிர்ந்த நீரைக் குடித்தால், கலோரிகள் எரிக்கப்படும். இப்படி கலோரிகள் எரிக்கப்பட்டால், உடல் எடை தானாக குறையும்.

தசைப்பிடிப்புக்களைத் தடுக்கும்

இரவில் படுக்கும் போது நிறைய பேர் தசைப்பிடிப்புக்களால் அவஸ்தைப்படுவார்கள். இப்படி ஏற்படுவதற்கு காரணம் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாததால் தான். உங்களுக்கு இப்படி அடிக்கடி இரவில் தசைப்பிடிப்புக்கள் ஏற்பட்டால், தூங்கும் முன் தண்ணீர் குடித்து வாருங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்பட்டு, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

மூட்டுப் பிரச்சனைகள் அகலும்

இரவில் தான் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்வதால், படுக்கும் முன் தண்ணீர் குடிப்பதன் மூலம், நாள் முழுவதும் கடினமாக வேலை செய்த தசைகள் மற்றம் மூட்டுகள் ரிலாக்ஸ் அடைந்து, அப்பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும்.

Tuesday, 26 January 2016


புஷ்-அப் உடற்பயிற்சி செய்தல் கிடைக்கும் பயன்கள்

புஷ்-அப் உடற்பயிற்சியை மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும் உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்யுங்கள்.
உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுங்கள். புஷ்-அப் செய்வதால் உடலின் மேற்பகுதியில் உள்ள பல தசைகள் முனைப்புடன் வேலை செய்யும். நெஞ்சு மற்றும் உங்கள் தோள்பட்டைகள் போன்ற பகுதிகள் அனைத்தும் இதனால் ஈடுபடும்.
இதனால் அந்த பகுதிகளுக்கு நல்லவலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதால் உங்கள் நெஞ்சுக்கு கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்று. இந்த உடற்பயிற்சி கொழுப்பை குறைக்கவும் தசைகளை வளர்க்கவும் உதவும். கார்டியோ உடற்பயிற்சிகளை போல் இதனையும் சீரான முறையில் செய்யலாம். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் இதயகுழலிய பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
உங்கள் மைய தசைகளை வலிமைப்படுத்தவும் கூட இது மிக சிறந்த உடற்பயிற்சியாகும். புஷ்-அப் செய்யும் போது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். புஷ்-அப் உடற்பயிற்சியை சீராக செய்து வந்தால், உங்களின் தோள்பட்டை, கைகள், முழங்கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்றவைகள் வலுவடையும். புஷ்-அப் செய்து வந்தால் குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் கூட உங்கள் எலும்புகளும் வலிமையுடன் இருக்கும்.

Sunday, 24 January 2016

உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சி சிறந்தது:

உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடலமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. அதனால், ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட்மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள்.

ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற் போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட்லிஃப் டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள்.

18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது நல்லது.
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1196392637057077/?type=3&theater

Friday, 22 January 2016

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா? அப்ப இந்த உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...
தலைவலி அனைவருக்குமே வரும் ஓர் பொதுவான பிரச்சனை தான். சாதாரண தலைவலி அளவுக்கு அதிகமாக டென்சன், கடுமையான பசி, உடலில் நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படும். சில சமயங்களில் தலைவலி உணவுகளின் காரணமாகவும் ஏற்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தலைவலி வருவதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதில் உணவுகளும் ஒன்று. உங்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மோசமாக இருந்தால், அதனால் தலைவலியை சந்திக்க நேரிடும். 

எந்த உணவுகள் தலைவலியை உண்டாக்கும்?

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
ஆய்வு ஒன்றில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் சிலருக்குத் தலைவலியைத் தூண்டுவதாக தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் தலைவலியால் அடிக்கடி கஷ்டப்படுபவராயின் ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளாதீர்கள்.
சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பின், சிவப்பு மிளகாய் சேர்த்த உணவுப் பொருட்களை உட்கொள்ளாதீர்கள்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்றவற்றில் தைரமின் மற்றும் ஹிஸ்டமைன் போன்றவை உள்ளது. இவை தலைவலியைத் தூண்டிவிடக்கூடியவை. எனவே தலைவலி இருப்பவர்கள், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.


காபி
காபி உங்கள் சோர்வை நீக்கி, உங்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும். இருப்பினும் எதற்கெடுத்தாலும் காபியை அதிகமாக குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன் தூக்கமின்மையை ஏற்படுத்தி, தலைவலியைத் தூண்டிவிடும்.

ஐஸ் க்ரீம்

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் ஐஸ் க்ரீம். ஆனால் இந்த ஐஸ் க்ரீம் தலைவலியைத் தூண்டிவிடும் பொருள் என்பது பலருக்கும் தெரியாது. இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், இது தலைவலியைத் தூண்டிவிடும். மேலும் ஆய்வுகளில் பங்கு பெற்ற பலரும் ஐஸ் க்ரீம் உட்கொண்ட பின் தலைவலியை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Wednesday, 20 January 2016


வேலைகளுக்கு இடையே செய்யும் எளிய பயிற்சி

அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அடிக்கடி களைப்பு ஏற்படும். அவர்கள் வேலையில் சிறிது இடைவெளி கிடைக்கும் போது சில எளிய பயிற்சிகளை செய்து வந்தால் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.. இந்த வகையில் சில எளிய பயிற்சிகள் இங்கு உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 

• நேராக நின்று கொண்டு வலது கையை மடக்கி தோள்பட்டை வரை மடக்கி இடது கையால் வலது கை முட்டியில் தாங்கி அழுத்தவும். இவ்வாறு இடது பக்கமும் 
செய்யவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். 

• நேராக நின்று கொண்டு கைகளை மேல் நோக்கி தூக்கி முட்டி வரை மடக்கவும். வலது கையால் இடது கை முட்டியையும், இடது கையால் வலது கை முட்டியையும் நன்றாக அழுத்தவும். இவ்வாறு 5 நிமிடம் செய்யவும். 

• நேராக நின்று கொண்டு கைகளை பின்நோக்கி கட்டிக்கொள்ளவும். தலையை முன்னும், பின்னுமாக அசைக்கவும். பின்னர் வலது, இடது பக்கமாக அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். 

- வேலை நேரங்களின் இடைவெளியில் இந்த பயிற்சிகளை தொடர்ந்து 10 நிமிடம் செய்து வந்தால் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.

Tuesday, 19 January 2016


பசி எடுக்கவில்லையா?? புதினாவை சாப்பிடுங்க!

புதினா கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது . வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது.  தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் . மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் பூசலாம். வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் , வறட்டு இருமலுக்கும் இது சிறந்த மருந்தாகும் .

மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து  தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது  நீங்கும். புதினா இலையை ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .

புதினாவுடன்  இஞ்சியையும் உப்பும் சேர்த்து  அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம், பித்தமும் அகலும். புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும்.

புதினா பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக் கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும்.  புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. 

புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள்,  சிறுநீர்  உபத்திரம் நீங்கும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது

Tuesday, 12 January 2016

முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்

முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடைவதை காணலாம். முதலில் விரிப்பில் அமர்ந்து கால்களை முன்புறமாக நீட்டிக்கொள்ள வேண்டும். சுவாசத்தை இயல்பான நிலையில் வைத்து முன்னால் குனிந்து உங்கள் கைகளால் கால்களின் கணுக்காலை தொட வேண்டும்.

அவ்வாறு குனியும் போது கால் முட்டுகள் வளைய கூடாது. இந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்க வேண்டும். 5 வினாடிகள் ஒய்வு எடுத்த பின்னர் மறுமுறை செய்யவும். பின்னர் படத்தில் உள்ளது போல் முட்டியை வளைத்து வைத்து கொண்டு கால் கணுக்கால்களை தொட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முதுகெலும்பு, தோள்கள் நன்கு வலிமை பெறுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டுகிறது. உங்கள் கால்விரல்கள் தொடும் முயற்சியில் ஈடுபடும் போது முதுகுத்தண்டில் அதிக வலி இருந்தால் இந்த பயிற்சியை செய்ய கூடாது. மேலும் இந்த பயிற்சியை செய்யும் போது முதுகிற்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.

Wednesday, 6 January 2016

நல்லா உயரம் ஆகணுமா? அப்ப இந்த உடற்பயிற்சி எல்லா பண்ணுங்க!

நல்லா உயரம் ஆகணுமா அப்ப இந்த உடற்பயிற்சி எல்லா பண்ணுங்க!உயரம்…, பலர் வாழ்க்கையை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் ஓர் விஷயம். உயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை.

உங்கள் தசையை பெரிதாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதற்கான இரகசியங்கள்!!! அவரவர் மரபணு தான் உடலின் மொத்த இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படையாக திகழ்கிறது. ஆயினும், உயரத்தை பொருட்டு பார்த்தல் மட்டும், ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி? சரி, இனி உயரம் அதிகமாவதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் காணலாம்….

நீச்சல் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

தொங்குவது இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

குனிந்து கால் விரல்களை தொடுவது நீங்கள் குனிந்து கால் விரல்களை தொட முடியவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செயுங்கள், ஓர் வாரத்தில் நீங்கள் இந்த பயிற்சியில் வெற்றி கண்டிட முடியும். இதுவும், உங்கள் உடலை நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். குனிந்தவுடன் எழுந்திரிக்க கூடாது, குனிந்து உங்கள் கால் விரல்களை பிடித்து ஓரிரு நொடிகள் பிடித்திருக்க வேண்டும். அதன் பின் தான் எழுந்திரிக்க வேண்டும்.

கோப்ரா ஸ்ட்ரெச் இந்த கோப்ரா ஸ்ட்ரெச்சிங் பயிற்சி உங்கள் தண்டுவடத்தை நீட்டிக்க உதவிகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகரிக்கும். படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல, கைகளை கீழே ஊனி, உங்கள் தோள்பட்டையை மட்டும் முடிந்த வரை மேல் உயர்த்த வேண்டும். உங்கள் முகம் நேராக பார்த்திருக்க வேண்டும்.
இடுப்பை உயர்த்துதல் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள படி, கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.
ஸ்கிப்பிங் உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

கால்களை மேல் உயர்த்துதல் நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

பிலேட்ஸ் பயிற்சி படத்தில் காண்பித்துள்ள படி, தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.

Tuesday, 5 January 2016

உடற்பயிற்சி செய்த பின்னர் நாம் செய்ய வேண்டியவை – செய்ய தவறுபவை

தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகிவிடும்.

ஆம், உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப்படும். அத்தகைய ஓய்வு கிடைக்காமல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

ஆகவே உடற்பயிற்சி செய்த பின்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். இங்கு உடற்பயிற்சிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடலை ரிலாக்ஸ் செய்ய மறந்துவிடுதல்

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இதனால் தீவிரமான பிரச்சனை ஏதும் நேராமல் தடுக்கும்.

வியர்வை உடையிலேயே இருத்தல்

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடனே உடைகளை மாற்ற வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப் புகுந்திருக்கும். அத்தகைய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தவறாமல் உடற்பயிற்சிக்கு பின், உடைகளை மாற்றுவதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.

குளிக்காமல் இருப்பது

சிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், அப்படியே ஊர் சுற்ற ஆரம்பிப்பார்கள். அப்படி இருந்தால், இன்னும் மோசமான நிலைமையை சந்திக்கக்கூடும். ஆகவே உடையை மாற்றி துவைத்த பின்னர், குளித்துவிட வேண்டும். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறோம் என்று அர்த்தம். ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடுவது நல்லது.

அல்கஹால் குடிப்பது

எப்போதுமே உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், அல்கஹால் குடிக்கக்கூடாது. இப்படி குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல் தடுக்கும். மேலும் அல்கஹாலைக் குடித்தால், உடலில் நீர்வறட்சி ஏற்படும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்காதது

உடற்பயிற்சிக்கு பின் போதிய அளவில் சிலர் தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இப்படி தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற்பயிற்சியின் போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.

சரியாக தூங்காதது

நன்கு உடற்பயிற்சி செய்து, அன்றைய நாள் சரியான அளவில் தூங்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றலானது கிடைக்காமல் போகும். மேலும் அனைவருக்குமே தெரியும், தூக்கத்தை மேற்கொண்டால் தான், உடற்பயிற்சியின் போது பாதிப்படைந்த தசைத் திசுக்கள் அனைத்தும் புத்துயிர் பெறும் என்று. ஆகவே சரியாக தூங்காமல் இருந்தால், மறுநாள் எப்படி உடற்பயிற்சியை ஆரோக்கியமாக செய்ய முடியும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

Monday, 4 January 2016

உலகம் ஓடும் வேகத்தில் மனிதர்கள் தங்கள் உடம்பை கவனிக்க நாம் மறந்துவிடுகிறோம்., ரத்த சுத்திகரிப்புக்கு சிலதை இங்கு நாம் பார்ப்போம். இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்.

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.