புஷ்-அப் உடற்பயிற்சி செய்தல் கிடைக்கும் பயன்கள்
புஷ்-அப் உடற்பயிற்சியை மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும் உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்யுங்கள்.
உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுங்கள். புஷ்-அப் செய்வதால் உடலின் மேற்பகுதியில் உள்ள பல தசைகள் முனைப்புடன் வேலை செய்யும். நெஞ்சு மற்றும் உங்கள் தோள்பட்டைகள் போன்ற பகுதிகள் அனைத்தும் இதனால் ஈடுபடும்.
இதனால் அந்த பகுதிகளுக்கு நல்லவலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதால் உங்கள் நெஞ்சுக்கு கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்று. இந்த உடற்பயிற்சி கொழுப்பை குறைக்கவும் தசைகளை வளர்க்கவும் உதவும். கார்டியோ உடற்பயிற்சிகளை போல் இதனையும் சீரான முறையில் செய்யலாம். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் இதயகுழலிய பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
உங்கள் மைய தசைகளை வலிமைப்படுத்தவும் கூட இது மிக சிறந்த உடற்பயிற்சியாகும். புஷ்-அப் செய்யும் போது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். புஷ்-அப் உடற்பயிற்சியை சீராக செய்து வந்தால், உங்களின் தோள்பட்டை, கைகள், முழங்கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்றவைகள் வலுவடையும். புஷ்-அப் செய்து வந்தால் குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் கூட உங்கள் எலும்புகளும் வலிமையுடன் இருக்கும்.
No comments:
Post a Comment