தாய், சேய் நலன் தரும் யோகா
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் யோகா செய்வதால் ரத்த ஒட்ம் அதிகரிக்கிறது மேலும் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர்பிடிமானம் மற்றும் திரவக்கோர்வை பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
யோகா தொடர்ந்து செய்து வந்தால் மன கவலை, மன அழுத்தம் குறையும். யோகா செய்யும்போது நரம்பு மண்டலம் இயக்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் போது தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்பானது தூக்கத்தை தூண்டுகிறது. இதனால் பெண்கள் நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.
உடலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு சிறந்த நிவாரணியாக செயல்படுவது யோகா. இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெற்றிகரமாக வெளியேற்றி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது, மேலும் யோகா தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகப்படுகிறது. ..
பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து கர்ப்பிணிகளையும் தாக்குவது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இவை நம்மை நெருங்காமல் இருக்க யோகா பயிற்சி செய்துவரலாம், ஏனெனில் கர்ப்ப காலத்தில் கர்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை யோகா தடுக்கிறது.
யோகா நரம்பு மண்டலத்தை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் உடல் நலம், மனநலம், மூச்சு பயிற்சி, ஹார்மோன்கள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுபடுத்துதல் போன்றவற்றிற்கும் யோகா உதவுகிறது..
எல்லா கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலியை எளிதாக அறிந்து கொள்ளமுடியும். இந்த பிரச்சனைக்கு யோகா பயிற்சி சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
யோகா பயிற்சி மூலம் இடுப்பு மற்றும் கால் பகுதிகள், முழுவதும் பல தசைநார்கள் இயக்கப்படுகிறது.. காலை நேரத்தில் மூச்சு பயிற்சி செய்தால் குமட்டல், காலை நோய் போன்றவை குறையும். யோகா வழக்கமான நடைமுறையில் பிரசவ வலியைத் தளர்த்துகிறது.
அதாவது யோகா செய்து வருவதன் மூலம் பிரசவத்தின் போது வயிற்று பகுதியில் தசைளை உறுதிப்படுத்தி குழந்தைகளை எளிய முறையில் குழந்தையை வெளியே தள்ளும் வேலையை செய்கிறது.. பிரசவத்தை மிகவும் சுலபமாக்குகிறது.
No comments:
Post a Comment