நீங்க வெறும் தரையில படுக்கிற ஆளா?... மொதல்ல நிறுத்திட்டு இதுல ஏதாவது ஒரு பாயில படுங்க...
வசதி இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருக்கும் உள்ள பிரச்னை, தூக்கமின்மை. வேலைசெய்த களைப்பில் உடல் அசதி இருந்தாலும், சிலருக்கு தூக்கம் வராது, ஏதேதோ கற்பனைகளில், சிந்தனைகளில், மனதை ஓடவிட்டு, தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
இன்றைய தூக்கமே, நாளைய புத்துணர்ச்சியை அதிகரிக்கும், உடலுக்கும் மனதுக்கும் செயல்படும் ஆற்றலை அதிகரித்து, செயல்களில் சிறப்பைக் கொடுக்கும், என்று நினைத்தால், எல்லோரும் படுத்தவுடனே, உறங்கிவிடுவார்கள். நிலைமை அப்படி இல்லையே!
காரணம்
மெத்தை வாங்கினேன், தூக்கத்தை வாங்கலே! என்று, நடிகர் திலகத்தை வாயசைக்க வைத்தாலும், உண்மை என்ன? மெத்தை வாங்கியதற்கு பதில், ஒரு பாய், வாங்கியிருந்தால், அவரும் நன்றாகத் தூங்கியிருந்திருப்பாரே! என்ன, இசைஞானியின் அற்புத இசையை, இழந்திருப்போம். பாடலைக் கடந்தால், படுப்பதற்கும், தூக்கத்துக்கும், நிறைய தொடர்புகள் இருக்கின்றன. முன்னோர்கள், வீடுகளில் வெறுந்தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சொல்லி, தடுக்கு எனும் ஓலைப்பாய், ஜமுக்காளம் விரித்து, அதன் மேல் அமரவைத்து, உணவு பரிமாறுவார்கள். காரணம் என்ன?
வெறும் தரையில்
மனிதனை இயக்கும் ஐம்புலன்களில் ஒன்றான மண்தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, கால்களின் வழியே சக்தி வெளியேறி, ஆற்றல் வீணாகி, உணவின் செரிமானம் பாதிக்கப்படும். எனவேதான், தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்க்கச்சொன்னார்கள். அதேபோலத்தான், வெறுந்தரையில் படுக்கக்கூடாது. படுத்தால், உடலின் ஆற்றல் மண்ணில் கலந்து, உடல் சோர்வடையும், செயல்களில் பாதிப்பு ஏற்படும். முற்காலத்தில், பாய்களில் படுத்தார்கள்! நோய்களின்றி வாழ்ந்தார்கள்! இதன் காரணமாகவே, முன்னோர்கள், தரையில் பாய் விரித்துப் படுத்தார்கள். பாயில் படுப்பதால், உடலின் ஆற்றல் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு, நல்ல தூக்கத்துடன், உடல் நோயும் விலகி விடும் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு பொதுவாக பாய் என்றால், கோரைப்பாய் தான் நினைவுக்கு வரும். ஆனாலும், கோரைப்பாயைத் தாண்டி, பல வகைப் பாய்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும், நல்ல தூக்கத்தை அளிப்பதோடு, மருத்துவ குணங்களும் நிறைந்தவை.
ஈச்சம் பாய்
கிராமங்களில், குளக்கரைகள், ஆர்ற்றங்கரைகளில் காணப்படும் ஈச்ச மரம், சிறுவர்களின், கோடைக்கால வேட்டை மரமாகும். பச்சை நிறத்தில் காய்கள் காய்க்கத்தொடங்கும் சீசனில் இருந்து, காய்கள் செவ்விள நிறத்தில் மாறும்வரை கண்கொத்திபாம்புபோல கண்காணித்து, செந்நிறம், சற்றே சுருங்கும்போது, பழமாகிவிட்டது என்று அறிந்து, காய்களை குலை குலைகளாகப் பறித்து, வீடுகளில் சேர்த்து வைத்து, நண்பர்களுடன் தின்பார்கள். இந்த ஈச்சம்பழம், பேரீச்சம்பழத்தின் சுவைக்கு நிகரானதுடன், இதிலுள்ள குளுக்கோஸ், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில், உண்ணாநோன்பு இருந்தபின், மாலையில் நோன்பு திறக்கும் வேளையில், பேரீச்சம்பழம் கட்டாயம் இடம்பெற்றிருப்பதற்கு காரணம், நாள் முழுதும் சாப்பிடாமல், உடல் சோர்ந்து இருந்தவர்களுக்கு, உடனடி ஆற்றல் மற்றும் உடல் சர்க்கரை அளவை இயல்பாக்க, அவை பெருந்துணை புரிவதால்தான். இத்தகைய நற்த்தன்மைமிக்க ஈச்சமர ஓலைகள் எனும் இலைகளைக் காயவைத்து, பாய்களாக முடைந்து, படுப்பதற்கும், சாப்பிட அமரும் தடுக்குகளாகவும் செய்து பயன்படுத்துகின்றனர். ஈச்சம் பாயில் படுத்து வந்தால், உடலில் பிராண வாயுவின் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வியாதிகள், முடக்குவாதம் போன்ற வாத வியாதிகளைப் போக்கி, உடல் சூட்டை, நீர்ச்சத்தை அதிகரித்து, உடலை நலமாக்கும்.
பிரம்பு பாய்.
பிரம்பு ஒரு வகை புல்லாகும், ஆற்றங்கரையோரங்களில் அதிகம் காணப்படும். தமிழ்நாட்டில் கொள்ளிடக்கரையில் காணப்படும் பிரம்பில் செய்யப்படும் நாற்காலி, சோபா, மற்றும் அலங்காரப் பொருட்கள், உலகப் புகழ்பெற்றவை. பிரம்பில் செய்யப்படும் குச்சியே, பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்களின் கைத்துணையாக, விளங்குகிறது. பிரம்பில் பின்னப்படும் பாய், உடல் சூட்டைத் தணிக்கும். சூட்டால் ஏற்படும் பேதியை, ஜுரத்தைப் போக்கும் ஆற்றல் மிக்கது.
கோரைப்பாய்
கோரைப்புல்லில் இருந்து செய்யப்படும் கோரைப்பாய் பரவலாக இன்று வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. படுக்கவும், பந்திகளில் அமரவும், வீடுகளில், அறைகளின் இடையே மறைப்பாக, கடைகளில் தரைவிரிப்பாகவும் பயன்படுகிறது. கோரைப்பாயில் படுத்தால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகி, உடல் அசதி, சூடு நீங்கும். உடல் புத்துணர்வு பெற்று, நல்ல தூக்கம் வந்து, அமைதியாக உறங்கலாம்.
மூங்கில் பாய்.
வீடுகளில், வாசலில் வெளிப்புற சுவர்களுக்குப் பதில், மூங்கில் தட்டிகள் வைத்திருப்பார்கள். சில கடைகளில், அழகுக்காக, மூங்கிலில் அலங்கார வளைவுகள், தடுப்புகள் வைத்திருப்பார்கள், பார்த்திருக்கிறோம். மூங்கில் பாய் பார்த்ததே இல்லை, என்கிறீர்களா? மூங்கிலை ஊறவைத்து பிளந்து, மெல்லிய பட்டைகளாக்கி பின்னப்படும் பாயில் படுத்தால், உடல் சூடு ஏற்பட்டு, குளிர் ஜன்னி ஜுரம், நடுக்கு ஜுரம் போன்ற காய்ச்சல் நீங்கி, உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் சமநிலையடையும்.
கம்பளிப்பாய்.
செம்மறி ஆடுகளின் உடலில் உள்ள உரோமங்களைக் கொண்டு பின்னப்படும் கம்பளிப் பாய், குளிர்காலத்திற்கு ஏற்ற பாயாகும். குளிரைப் போக்கி, உடலை கதகதப்பாக மாற்றிவிடும். கம்பளிப்பாயில் படுத்தால், காய்ச்சல், உடல் சோர்வு நீங்கும்.
தாழம் பாய்
தற்கால தலைமுறைக்குத் தெரியாத, நறுமண மலர் கொண்ட, ஈட்டி போன்ற மடல்களைக் கொண்ட தாழம் கதிர்கள், செடி வகையைச் சேர்ந்த ஒன்றாகும். தலையில், உச்சி முதல், முடி தொங்கும் இடுப்பு வரை தாழம்பூவை, சிறுமிகளுக்கு சடையாகப் பின்னி அழகு பார்ப்பார்கள். அழகுக்காக மட்டுமல்ல, பருவ வயதை எட்டுவதற்கும், மன நிலை மாற்றத்திற்கும், அவர்களைத் தயார்ப்படுத்தும் ஒரு நிகழ்வாக, இந்த தாழம்பூ சடை இருந்தது. இத்தகைய தாழம் மடல்களை பாயாகப் பின்னி, அதில் படுத்துவந்தால், உடலில் பித்த பாதிப்பால் ஏற்படும், தலை சுற்றல், வாந்தி மயக்கம் போன்றவை நீங்கும்.
இலவம் பஞ்சு
படுக்கை. இலவம் பஞ்சு மெத்தைதானே, என்று யோசிக்கிறீர்களா? தெள்ளுதமிழ் கவி பாட்டி அவ்வை அன்றே சொன்னார், இலவம் பஞ்சில் துயில் என்று. இலவம் பஞ்சு, மெத்தையல்ல, அது, படுக்கை. பருத்தித்துணியால் அடைக்கப்பட்ட இலவம்பஞ்சு படுக்கையில், தூங்கிவர, நாள் முழுதும் அலைந்து திரிந்ததால் ஏற்பட்ட உடல் அசதி நீங்கும், உடல் சூடு தணியும், சுவாசம் சீராகி, மன நிலையில் உற்சாகம் மற்றும் செயல்களில் வலிமை அதிகரிக்கும்.

No comments:
Post a Comment