உலர் திராட்சை
வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள்.
இவற்றினால் தீரும் பிற நோய்கள்
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.
இந்தப்பழத்தை பாலில் போட்டும் வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும்.
தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.
No comments:
Post a Comment