Tuesday, 27 October 2015

ஒல்லியாக விடாமல் தடுக்கும் உணவுகள்!!!


ஸ்லிம்மான உடலமைப்பு வேண்டும் என்று நினைத்து தினமும் 3-4 மணிநேரம் உடற்பயிற்சி செய்தும் பலனில்லாமல போகின்றதா? நீங்கள் செய்யும் உடற்பயிற்சியில் ஏதேனும் கோளாறு இருக்கும் என்று நினைக்கிறீர்களா அல்லது சாப்பிடும் உணவில் ஏதேனும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஏனெனில், நீங்கள் சாப்பிடும் உணவு, உங்களுடைய ஸ்லிம்-டவுன் முயற்சியை முழுமையாக டவுன் செய்துவிடும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மேலும் இந்த உணவுகள் உங்களுடைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை ஒல்லியாக வைத்திருக்க முனைவதை தடுக்கவும் செய்கின்றன.

குறைவான கொழுப்பு, குறைவான சுவை கொண்ட மாற்று உணவுகளை 'ஆரோக்கியமான உணவு' என்ற பெயரில் சாப்பிட்டாலும், அவையும் கூட உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைத்து விடுகின்றன. 'அதிகமான நார்ச்சத்து' மற்றும் 'இயற்கையானது' போன்ற லேபிள் வசனங்கள் உங்களை ஏமாற்றும் வேலையை முதலில் செய்கின்றன.

குறைவான கொழுப்பு, குறைவான சுவை கொண்ட மாற்று உணவுகளை 'ஆரோக்கியமான உணவு' என்ற பெயரில் சாப்பிட்டாலும், அவையும் கூட உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைத்து விடுகின்றன. 'அதிகமான நார்ச்சத்து' மற்றும் 'இயற்கையானது' போன்ற லேபிள் வசனங்கள் உங்களை ஏமாற்றும் வேலையை முதலில் செய்கின்றன.
.................
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1146992828663725/?type=3&theater

Monday, 19 October 2015

பெண்களுக்கான உடற்பயிற்சி

பெண்களை காலம் காலமாக பூ, ரோஜா, பட்டு, மெல்லினம், மென்மை, தங்கம் என்று மிக மிக மெல்லிதாக வர்ணித்தே வைத்திருந்து விட்டார்கள். அதனாலேயே என்னவோ பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் வாய்ப்பினை வழங்காமலேயே ஆணுலகம் பத்திரமாக பார்த்து கொண்டது. இதற்கு அடிப்படையில் உடம்பு ரிதியாக ஒரு காரணம் இருப்பதாகவும் உலகத்தினர் நம்பியும் வந்தனர். பெண்கள் உடல் ரிதியில் உறுதி இல்லாதவர்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. பெண்களில் பலரும்கூட அப்படித்தான் பொய்யாக நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் உண்மையில் பெண் ஆணைவிட உடலில் உறுதிகொண்டவள், ஒரு குழந்தையையே பெற்றெடுக்கும் உடல் வலிமையை பெற்றவள் பெண், அதற்கேற்ப அவளின் உடல் உறுப்புகள், இடுப்பு எலும்புகள் எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது என்பதே உண்மை.


இந்த உண்மை உணர்ந்த பல பெண்கள் இன்று ஆணிற்கு நிகரான பல பணிகளை நிகழ்த்துகின்றனர். இன்னும் அவர்கள் உறுதிபெற உடற்பயிற்சி கை கொடுக்கும்.............
...........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1143329545696720/?type=3&theater


Wednesday, 14 October 2015

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching) பலரும் செய்வதில்லை. அதன் உன்னத அருமை யாருக்கும் தெரிவதில்லை.

தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்... இவற்றைச் செய்வதற்கு முன்பும்   (Before  warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) எலும்புகளின் அனைத்து இணைப்புகளையும், எல்லா தசை மண்டலங்களையும், உடலின் தோலையும் சுருக்கி - நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.

இது தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து (Flexibility) உங்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை. நன்றாக உடற்பயிற்சி செய்யும் பலர், என்னிடம் வந்து, ‘சார், உடற்பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் களைப்படைகிறேன். இரவு உடல் வலியால் நன்றாக உறங்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்.

நீங்கள் பயிற்சி செய்யும் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோ எப்போதும் 200 சதவிகிதப் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்கள். நன்றாக உறங்குகிறார்கள். முந்தைய நாளைவிட அடுத்த நாள் மேலும் கடுமையான பயிற்சியில் ஈடுபட மனதளவில் உடலளவில் தயாராக உள்ளனர்.
.....................
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1141223562573985/?type=3&theater

Friday, 9 October 2015

எளிதில் தொப்பையை குறைக்க 15 சிறந்த வழிகள்!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.
............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1138891099473898/?type=3&theater

Wednesday, 7 October 2015

காலை உணவைத் தவிர்த்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துத் தெரியுமா?

காலை உணவை ஏராளமான மக்கள் தவிர்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் காலையில் தாமதமாக எழுவது எனலாம். காலையில் தாமதமாக எழுவதால், அன்றைய நாளில் நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் தாமதம் ஏற்படும். இதனால் காலை உணவை ஒரு பொருட்டாக மதிக்காமல், பலரும் மதியம் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர்.

ஆனால் ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் 8-9 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் ஆற்றல் இல்லாமல் இருக்கும். அத்தகைய நிலையில் காலை உணவை தவிர்த்தால், அன்றைய நாளுக்கு வேண்டிய ஆற்றல் இல்லாமல், நாள் முழுவதும் சோர்வுடன் தான் செயல்படக்கூடும். அதுமட்டுமின்றி, காலையில் கண்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து, ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே, நல்ல பலனைப் பெற முடியும்.

சரி, ஏன் காலை உணவை உட்கொள்ள வேண்டும்? அப்படி காலை உணவை உட்கொள்ளாமல் இருந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்..............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1137812819581726/?type=3&theater

Sunday, 4 October 2015

உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள்!

குண்டான உடலை குறைக்க ஆண் களும், பெண் களும் பல்வேறு வழிமுறைகளை கடைப் பிடிக் கின்றனர். நடை பயிற்சி, கடுமை யான உடற் பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயல்கின்றனர்.

இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.
...............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1136536299709378/?type=3&theater

Friday, 2 October 2015

மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை!!!

இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். தினசரி உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், வேலை பளு அதிகமாக உள்ளதால், உடலளவிலும் மனதளவிலும் அழுத்தம் ஏற்படுவது உயர்ந்து கொண்டே போகிறது.

சாயங்கால வேளையில், உடல்நலத்தை பேணும் இடத்தில், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்கலாம். நாள் முழுவதும் வேலை பார்த்த அயர்ச்சி மற்றும் சோர்வால், உடல் அமைதி பெற உகந்த நேரமாக இது விளங்குகிறது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது ஆற்றல் திறன் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

இந்த உடல்நல கட்டுரையில், உடற்பயிற்சி செய்யும் போது ஒருவர் பின்பற்ற வேண்டிய தேவையான டிப்ஸ்களை பற்றி நாங்கள் விவரிக்க போகிறோம். சாயங்கால உடற்பயிற்சியாக இருந்தாலும் கூட, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சில டிப்ஸ்களை தான் இப்போது பார்க்க போகிறோம்..............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1135656289797379/?type=3&theater

GANDHI ORU VARALARU

Thursday, 1 October 2015

தசைகளை வலுப்படுத்தும் பிளாங் உடற்பயிற்சி

பிளாங் உடற்பயிற்சி எனக்கூறப்படும் பயிற்சிகள் கோர் பயிற்சிகளை சார்ந்ததாகும்..இது ஒரு நிலையான பயிற்சி இதன் மூலம் வயிற்றில் உள்ள தசைகள் முதுகுப்பகுதி தோள் பகுதி ஆகியவை பலம் பெறும்.. இதில் பல வகைகள் உள்ளது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள தசைகளை பலம் பெற செய்கின்றது இப்பயிற்சிகளின் மூலம் சம அளவு வலிமை உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வோர் இவற்றை எப்போதும் தொடர்ந்து செய்வது நல்லது….

இப்பயிற்சியை செய்யும் போது..............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1135146163181725/?type=3&theater