Wednesday, 7 October 2015

காலை உணவைத் தவிர்த்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துத் தெரியுமா?

காலை உணவை ஏராளமான மக்கள் தவிர்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் காலையில் தாமதமாக எழுவது எனலாம். காலையில் தாமதமாக எழுவதால், அன்றைய நாளில் நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் தாமதம் ஏற்படும். இதனால் காலை உணவை ஒரு பொருட்டாக மதிக்காமல், பலரும் மதியம் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர்.

ஆனால் ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் 8-9 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் ஆற்றல் இல்லாமல் இருக்கும். அத்தகைய நிலையில் காலை உணவை தவிர்த்தால், அன்றைய நாளுக்கு வேண்டிய ஆற்றல் இல்லாமல், நாள் முழுவதும் சோர்வுடன் தான் செயல்படக்கூடும். அதுமட்டுமின்றி, காலையில் கண்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து, ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே, நல்ல பலனைப் பெற முடியும்.

சரி, ஏன் காலை உணவை உட்கொள்ள வேண்டும்? அப்படி காலை உணவை உட்கொள்ளாமல் இருந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்..............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1137812819581726/?type=3&theater

No comments:

Post a Comment