Wednesday, 27 August 2014


தாமிர பாத்திர நீரின் மகத்துவம் 

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

பாக்டீரியாக்களை கொல்லும்:
தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்:
தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

கீல்வாத வலியை குணப்படுத்தும்:
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

புண்களை வேகமாக குணப்படுத்தும்:
புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்:
மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்:
வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

இரத்த சோகையை எதிர்க்கும்:
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

கர்ப்ப காலத்தின் போது:
கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்:
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

வயதாகும் செயல்முறை குறையும்:
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.


முதுமையில் உடற்பயிற்சி அவசியமா ?

உண்மையில் வயதுக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். நான்கு விதமான உடற்பயிற்சிகளை முதியவர்கள் செய்யலாம். 

தனிப்பட்ட அல்லது ஒரு சில தசைகளை மட்டும் சுருங்கி விரியச் செய்கின்ற உடற்பயிற்சிகளை எளிதில் உடலுறுப்புகளை அசைத்தே செய்ய முடியும். இந்த பயிற்சிகளை செய்வதற்கு ஆக்ஸிஜன் (பிராணவாயு) அதிகமாக தேவைப்படாது.

நான்கு வகை பயிற்சிகள் :

1. தசைகளை சுருக்கி இயக்கும் பயிற்சி
2. செயல் சார்ந்த உடற்பயிற்சி
3. ஆக்ஸிஜனை உட்கொண்டு செய்யும் உடற்பயிற்சி
4. தசைப்பயிற்சி

1. தசைகளை சுருங்கச் செய்து, பிறகு இயங்கச் செய்வது இந்த வகையான உடற்பயிற்சி. இது பளு தூக்கல், உடலை வளைத்தல், தாண்டல் என பல வகைப்படும். 'கட்டழகுப் பயிற்சி'களான இவை தசைகளுக்கு அதிகமான பயிற்சியை அளிக்கும்.

2. இப்பயிற்சியை ஒன்று அல்லது இரண்டு வழிகளில் செய்யலாம். இதை செய்யும்போது குறிப்பிட்ட அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். பயிற்சியின் இறுதியில் அதன் அளவு குறைபடும். மாடிப் படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல், குறிப்பிட்ட தூரத்தை குறித்த நேரத்தில் கடப்பது போன்றவை இப்பயிற்சியில் அடங்கும்.

3. இந்த உடற்பயிற்சி மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பயிற்சியை செய்வதற்கு ஆக்ஸிஜனை உட்கொள்வது அவசியத் தேவையாகின்றது. பயிற்சி செய்யும்போது உண்டாகும் களைப்பினால் ஆக்ஸிஜன் குறைவதில்லை.

இந்த பயிற்சியை செய்வதால் நுரையீரல்கள் மிகுதியான ஆக்ஸிஜனை உட்கொண்டு நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடை (கரியமில வாயு) மிகுதியாகவும், சிரமமின்றியும் வெளியேற்றுகின்றது. இதனால் இதயம் வலிமை பெறுகின்றது.

4. இந்த பயிற்சியில் தசைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அழுந்துமாறு செய்வது அல்லது அசைவில்லாத ஒரு பொருள் மீது நம் வலிமையை காட்டி சோதிப்பது. இந்தப் பயிற்சியினால் தசைகள் உருண்டு திரண்டு பருத்துக் காணப்படும்.

இது வெறும் தசைப் பயிற்சியே. இந்த நான்கு வகை உடற்பயிற்சிகளும் முதியோர் செய்யத்தக்கவை. இவற்றுள் அவரவர்கள் விருப்பமான பயிற்சியை மேற்கொண்டு வந்தால், வயதான காலமும் வசந்த காலமாகவே இருக்கும்.

Sunday, 24 August 2014


எட்டு போட்டு நடை பயிலுங்கள் !

இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.

உலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும்.

நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.

சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.

சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.
மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.

அதுதான் எட்டு போட்டு நடை !

எட்டு போட்டு நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.

அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.

மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.

இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்

மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.

அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.
அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.

இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.

எட்டு போட்டு நடப்பதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.

இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட
பிரச்சினைகள் விலகும்.

ரத்த ஓட்டம் சீர்ப்படும்.

ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.

தூக்கமின்மை சரியாகும்.

அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.
ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.
அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.

இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.

நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.


இடுப்பு நரம்புகளை வலுவடைய செய்யும் 
ஹிப்டிவிஸ்டர்  ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்

உடலை வளைத்து வேலை செய்வது இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. விளைவு உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. தசைகளைக் கரைக்ககூடிய சில எளிய பயிற்சியை பார்க்கலாம்.. 

இந்த பயிற்சி செய்பவர்கள் அவர்களில் உயரத்திற்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும். முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். வலது கை, வலது காலைத் தொடுவதுபோல் வளைத்து, திரும்பவும் பழைய நிலைக்கு வரவும். இதுபோல் 30முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 30 முறை செய்யவேண்டும்.

இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.

பலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்புப் பகுதியின் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்துவிடும்.

Friday, 22 August 2014


உழைத்த களைப்பு, நல் இரவின் நிம்மதியான தூக்கத்தில்தான் நீங்கும். இன்று பலரும் போதுமான தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் வராமல் தவிப்பதற்கு, தலையணையும் ஒரு முக்கிய காரணம். தலையணை வைக்கலாமா...கூடாதா? எந்த மாதிரியான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்?.. போன்ற சந்தேகங்களுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்கம் தருகிறார்.

'தலையணை வைப்பது நல்லதா?'

'தலையணை வைப்பது நல்லது, கெட்டது என்பதற்கு எந்த மருத்துவரீதியான நிரூபணமும் இல்லை. ஆனால், ஒரு சிலருக்கு தலையணை வைத்துப் படுப்பதால் சில பிரச்னைகள் வரலாம். உயரம் அதிகம் கொண்ட தலையணை பயன்படுத்துவதால் மட்டுமே பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.'

'தலையணை உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?'

'டர்க்கி டவல் அளவுக்கு மென்மையாகவும், அதை நான்காக மடித்தால் வரும் தடிமன் அளவுக்கு உயரமும் இருந்தால் போதும். அதையும்விட சற்று உயரமாக இருந்தால்கூட பரவாயில்லை. சின்னக் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாக இருக்கும். மிக குறைந்த உயரம் உள்ள இலவம் பஞ்சு தலையணையைப் பயன்படுத்தலாம். இதனால், குழந்தைக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் வராமல் இருக்கும்.'

'உயரமான தலையணை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?'

'முக்கியமான பிரச்னை, கழுத்துப் பகுதியில் சதைப்பிடிப்பு ஏற்படும். இதனால் மறுநாள் கழுத்தைத் திருப்புவதில் சிரமம் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் ,இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் உள்ளது. அதன் ரத்த ஓட்டம் பாதிக்கலாம்.'

'வேறு யாரெல்லாம் தலையணைகளை தவிர்க்க வேண்டும்?'

'குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்பில் சவ்வு விலகியவர்கள் தலையணையை தவிர்த்து சம நிலையில் மட்டுமே படுக்க வேண்டும். மற்றவர்கள் தலையணைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை!'


முருங்கை அறியாத ரகசியம் 

முருங்கைக்காய் என்பது ஏழைகளின் காய்கறியாக இருந்தது. ஆனால் உண்மையில் இது நம்ப முடியாத சக்தி நிறைந்தது. இதில் உள்ள விட்டமின்களும், மினரலும் வேறு எங்கும் காண முடியாது .

இது மருத்துவ குணம் நிறைந்தது. வளர்ப்பது எளிது.

பலன்கள்: 

முருங்கை இலை நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.

தோல் பொலிவு பெற மற்றும் சக்தி பெற உதவும். ரத்த கொதிப்பு குறையும். தலை வலி நீங்கும்.

முருங்கை வேர்கள் கண்களின் தசைகளை வலுவாக்கும்.

முருங்கை வேர்கள் எலும்பு பிணைப்பு, தசை நாண்களின் வீக்கத்தை குறைக்கும். குடல் புழுக்களை நீக்கும்.

முருங்கைக்காய் ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.

ரதத்தின் சர்கரை அளவை மட்டுபடுத்தும்.

இது புற்று நோய்க்கு சிறந்த மருந்து. புற்று நோயை வளராமல் தடுக்கும்.

நல்ல இரவு தூக்கம் கிடைக்கும், அல்சர் நோய்க்கு சிறந்த மருந்து

கால்சியம் சத்து நிறைந்தது. எனவே தாய் பால் சுரக்க பெரியவர்கள் தாய்மார்களுக்கு இதை கொடுப்பர்.

இதில் உள்ள பொட்டசியம் வாழை பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிகம்.

இதில் உள்ள வைட்டமின் ஏ கேரட்டை விட நான்கு மடங்கு அதிகம்.

இதில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட ஏழு மடங்கு அதிகம்.

இதில் உள்ள ப்ரோட்டின் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம்.

முருங்கை விதைகள் அசுத்த நீரை சுத்த படுத்தும்.


Thursday, 21 August 2014


ஆண்மை சக்தியை அதிகரிக்கும் கோதுமை 

கோதுமையின் மகத்தான பயன்களை பார்க்கலாம்.... 

* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். 

* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.


உயரமாக என்ன சாப்பிடலாம் 

உணவு - எவ்வாறு வாகனத்திற்கு எரிபொருள் இன்றியமையாததோ அதே போல மனித உடலின் செயல்பாட்டிற்கு சரியான உணவு மிக மிக அவசியம். எப்படி வாகனத்திற்கு தவறான எரிபொருளை நிரப்பினால் அந்த வாகனம் சரியாக இயங்காதோ அதே போல தான் உடலும்.

உயரமாக வளர உதவும் உணவுகள்

உயரமாக வளருவதற்கு சமச்சீர் உணவு அவசியம். ஒரே உணவாக உண்ணாமல் கலவையான உணவுகளாக உண்ணும் பொழுது அது சரியான உடல் உயரத்தை வெளிக்காட்டும். உயரமாக வளருவது பரம்பரை குணாதிசயங்களைப் பொறுத்துத் தான். தாய், தந்தையர், மூதாதையர் என்ன உயரத்தில் உள்ளனரோ அதன் அடிப்படையிலேயே தான் ஒருவரின் உயரம் அமையும். இருப்பினும் உணவும் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

உணவுகளை சரியாகத் தேர்ந்தெடுத்து அவற்றை ஓர் கலவையாக கலந்து உண்ணுவது சரியான உயரத்தைத் தரும். உணவுகளை வகை வகையாகப் பிரிக்கலாம். அந்த வகைகளில் எல்லாவற்றையும் சேர்த்து ஒர் கலவையாக எடுத்துக் கொள்வது அவசியம்.

காய்கறிகள், பழங்கள் - சமச்சீர் உணவில் முதலாம் படி காய்கறிகள் மற்றும் பழங்கள். இவற்றில் அதிக அளவு வைட்டமின்கள், கரோட்டீன், தாதுப் பொருட்கள் நிறைந்து இருப்பதால் இவற்றை அவசியம் உணவில் சேர்க்க வேண்டும்.

தானியங்கள் - சமச்சீர் உணவின் இரண்டாம் படி தானியங்கள். இவற்றில் அதிக மாவுச்சத்து இருப்பதால் இவை உடலுக்குத் தேவையான உடனடி எரிசக்தியைத் தரக் கூடியவை இவையே அதிக எரிசக்தியை தரக் கூடியவை. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் வளர்ச்சி மற்றும் உயரம் வளர்வதற்குத் தேவையான எரிசக்தியை தருகின்றன. எனவே இவை அவசியம் உணவில் இடம் பெற வேண்டும்.

புரதம் - புரதம் நிறைந்த உணவுகளும் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. மாமிசம், கோழிக்கறி, மீன் மற்றும் கடல் உணவுகள், பயறுகள், கடலைகள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். அவை புரதம் மட்டுமின்றி துத்தநாகம் - ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களையும் தருகின்றன.

ஜிங்க் - குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு ஜிங்க் மிக மிக அத்யாவசியமான உலோகப் பொருள். சரியான அளவு ஜிங்க் உணவில் இருந்தால் தான் வளர்ச்சி முழுமையடையும். எனவே அவசியம் ஜிங்க் தரக் கூடிய அதிக புரதம் தரும் மாமிச வகைகள் மற்றும் கொட்டை, பயறு வகைகளை உணவில் இடம் பெறச் செய்வது நல்லது. காய்கறிகளில் பரங்கிக்காய் அதிக ஜிங்க் தரக்கூடியது. பால் மற்றும் பால் பொருட்கள், உடல் வளர்ச்சி மிகவும் தேவையான மற்றொரு பொருள் கால்ஷியம். இந்த கால்ஷியம் உணவில் போதுமான அளவு இருந்தால் தான் உடலின் எலும்புகள் வலுப் பெறும். எலும்புகள் வலுவாக இருந்தால் தான் சரியான உடல் உயரம் வெளிப்படும். தேவையான மற்றொரு பொருள் வைட்டமின் டி இதுவும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகம் இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உயரம் அதிகமாக வேண்டும் என்பதற்காக இவ்வுணவு வகைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் அனைத்து வகை உணவுகளையும் சமமாக கலவையாக சேர்த்து உட்கொள்வது நல்ல பலனை தரும்.

Monday, 18 August 2014


உடலுக்கு உறுதி அளிக்கும் ராகி உணவுகள் 

ராகி இதன் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணி விட வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும். நம் முன்னோர்கள் நீண்ட காலம் நேயற்ற வாழ்வு வாழ்ந்தற்கு இது போன்ற சத்துள்ள தானியங்களை உணவாக உண்டதால் தான்....!!! கொங்கு நாட்டில் ராகி பிரதான உணவாக இருந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை....!!!

ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது. பலர் ராகி களி சிறைச்சாலைகளில் கொடுக்கும் உணவு என்று கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ராகியில் உள்ள சத்துக்கள், அரிசியில் உள்ள சத்துக்களை விட அதிகமானதாகும். ராகியின் குணங்களை பட்டியலிட்டு பார்ப்போமேயானால், அதன் பலனை தெரிந்து கொள்ளலாம்.

ராகியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.
அரிசியில் உள்ள சத்துக்கள்
புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

ராகியின் பயன்கள் :

ரத்தம் சுத்தியாகும்
எலும்பு உறுதிப்படும்
சதை வலுவாக்கும்
மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.
தென்னிந்தியர் தாங்கள் தான் அந்தஸ்து, நாகரீகம், வாய்ந்தவர்களென்று கொண்டு நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகி விலை மலிவான உணவு என்று கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.

‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

ராகி இட்லி

தேவை


புழுங்கலரிசி-2கப்
ராகி-1கப்
வெந்தயம்-10கிராம்
உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)
உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்.
உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.

ராகி உளுந்து தோசை

தேவை


ராகி மாவு-4கப்
வெள்ளை உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப
புளித்த தயிர்-மாவு ஊறவைக்கத் தேவையான அளவு

செய்முறை

உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ராகி மாவை லேசாகப் புளித்த கட்டித் தயிரில் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நுரைக்க அரைத்து கடைசியில் ஊற வைத்த மாவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எடுத்து, மாவு பொங்கி வருவதற்காக மறுநாள் காலை வரை மூடி வைக்கவும்.
மறுநாள் நன்றாகக் கலந்து விட்டு மசால் தோசை போல மத்தியில் சட்டினி பூசி, ஏதாவது மசாலா வைத்து பரிமாறலாம்.
வெங்காயம் தூவி ஊத்தப்பம் போலவும் ஊற்றலாம்.

ராகி அடை

தேவை

ராகி மாவு-2கப்
சோயா மாவு-1/4கப்
தண்ணீர்-21/2கப்
எண்ணெய்-சுடுவதற்கு
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-11/2 டீஸ்பூன்
உருவிய முருங்கை இலை-1/2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2கப்

செய்முறை

தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
நன்றாகக் கொதிக்கும் போது, தணலைக் குறைத்து மாவைக் கொட்டி கிளறி உடனே அடுப்பில் இருந்து கீழே இறக்கவும்.
கை பொறுக்கும் சூடு வரும் போது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும்.
அதோடு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, முருங்கை கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எலுமிச்சையளவு மாவை எடுத்து ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி கல்லிலே போட்டு இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ராகி பயத்தம் பருப்பு காரப் புட்டு

தேவை


ராகி மாவு-1கப்
பயத்தம் பருப்பு-2டே.ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-2டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்-2
கடுகு-1/2டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி-1டே.ஸ்பூன்

செய்முறை

ராகி மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொஞ்சமாகத் தெளித்து பிசறவும்.
இதை பெரிய கண் உடைய சல்லடையில் சலிக்கவும்.
குக்கரின் உள்ளே ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு மேலே மெல்லிய துணியை கட்டி அதில் மாவை பரவலாகப் பரப்பி வைக்கவும். (இட்லி கொப்பரையில் நேரடியாக துணியைக் கட்டியும் வைக்கலாம்)
ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.
பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்த பருப்பு, ராகி மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுக்கவும். கொத்தமல்லி தழையை மேலே பரவலாகத் தூவி பரிமாறவும்.

ராகி இடியாப்பம்

தேவை

ராகி மாவு-1கப்
கோதுமை மாவு-1கப் (ஆவியில் வேக வைத்தது)
கடலை மாவு-1/4 கப்
உப்பு-தேவைக்கேற்ப
சுடுதண்ணீர்-மாவு பிசைய

செய்முறை

கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.
வறுத்த மாவுகளோடு கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். (3 நிமிடங்கள்)
காய்கறி மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.

ராகி ரொட்டி

தேவை

ராகி மாவு-2கப்
நீர்த்த புளிக்கரைசல்-2கப்
பச்சை மிளகாய்-4
உப்பு-தேவைக்கேற்ப
முருங்கைக் கீரை உருவியது-1/2கப்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய்-2டீஸ்பூன்
எண்ணெய்-சுடுவதற்கு

செய்முறை

ஒரு வாணலியில் புளிக் கரைசலை அளந்து ஊற்றி அதில் உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.
மறுபடியும் அடுப்பின் மேல் வைத்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும்.
முருங்கைக் கீரையை உருவி சேர்க்கவும்.
ஒரு எலுமிச்சையளவு பிசைந்த மாவை எடுத்துக் கொண்டு எண்ணெய் தடவிய வாழையிலையில் தட்டி சூடான தோசைக்கல்லின் மேல் போடவும்.
கைகளால் லேசாகத் தூக்கிவிட்டு இலையை எடுத்து விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடியால் மூடி சுடவும்.
இரண்டாவது பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.


பழச்சாறில் உள்ள  குறைபாடுகள் 

பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான்.

மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, பழச்சாறு தயாரிக்கும் போது, பழத்தை நன்கு மசித்து அதில் உள்ள நார் சத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால், பழத்தின் முக்கிய நன்மையான நார்சத்து நமக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது.

அடுத்ததாக ருசிக்கு பழச்சாறில் சர்க்கரையை சேர்க்கிறோம். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதுவும் நோயாளி ஒருவர் தொடர்ந்து பழச்சாறை அருந்தி வந்தால், அவரது உடலில் சர்க்கரையின் அளவு கண்டபடி ஏறி இறங்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே, மிகவும் முடியாத நிலையில் இருக்கும் போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை. ஒருவரால் நன்கு பழத்தை மென்று சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும் போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு எளிதாக ஜீரணம் செய்யக் கூடிய உணவு பொருள் கிடைக்கிறது. தேவையற்ற சர்க்கரை சேர்வதில்லை.


உடல் எடையைக் கட்டுபடுத்தும் தக்காளி 

தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி' உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கெனவே நாம் அறிந்த விஷயம்.

தற்போது, தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில், தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர்.

Friday, 15 August 2014


பிராய்லர் கோழி சாப்பிட்டால் ?

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.


ஆண் தவறாமல் சாப்பிட  வேண்டிய  உணவுகள் 
ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்கும் இந்தக் காலத்தில். பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும். நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள்!!! இங்கே ஆண்களுக்கு ஆரோக்கியம் ஊட்டும் இயற்கையான 20 வகை உணவுகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாகவும், எளிதில் நோய் தாக்காதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதவெப்ப பழங்கள் :

மிதவெப்ப பழங்களான மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களின் தோலில் பயோஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பல சத்துப்பொருட்கள் உள்ளன. ஆகவே ஆண்கள் வெயில் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பழங்களை தவறாது உட்கொள்வது அவசியம்.

சிகப்பு குடைமிளகாய் :

ஆரஞ்சு பழச்சாற்றை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி சத்தானது சிகப்பு குடமிளகாயில் உள்ளது. அதிலும் குடைமிளகாயை பச்சையாக உட்கொள்வது உடலில் பயோஃப்ளேவோனாய்டுகளைச் சேர்க்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

பூண்டு :

பலவகைகளில் மிகச்சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. பூண்டின் நோய்தடுப்பு குணத்தை அறிந்திருக்கும் நம் உணவு முறை, அதன் மருத்துவ குணங்களை அறிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது சீரான இரத்த ஓட்டத்திற்கும் பூண்டு உதவுகிறது.

க்ரீன் டீ அல்லது கருப்பு டீ

பாலிஃபீனால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ள க்ரீன் டீ புற்றுநோய் செல்கள் பிரிவதை தடுக்கிறது. கருப்பு டீ எனப்படும் பால் கலக்காத டீயிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அதிலும் பாலிஃபீனால்கள் அதிகமுள்ள க்ரீன் டீ வயிறு, நுரையீரல், குடல், ஈரல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கிறது.

பால்

பால் பொருட்கள் சீஸ், தயிர், பால் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். ஒரு பகுதி பாலில் 8 அவுன்ஸ் கார்னிடைன் உள்ளது. அதுமட்டுமல்லாது கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற சத்துகளும் உள்ளன.

மாட்டுக்கறி:

கார்னிடைன் அதிகமுள்ள மாட்டுக்கறியில் அமினோ அமிலம், புரதம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

தக்காளி :

செடிகளில் உள்ள லைகோபைன் எனப்படும் இயற்கையான வேதியியல் பொருள் தக்காளியில் அதிகம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான இது விரை, நுரையீரல், வயிற்று புற்றுநோயை தடுக்கிறது.

மாதுளை பழச்சாறு

விரை புற்றுநோய்க்கு இது மருந்தில்லை என்றாலும் புற்றுநோயின் பரவலை தடுக்க உதவுகிறது. அதிலும் தினமும் 8 அவுன்ஸ் மாதுளை சாறு குடித்தால், விரையின் ஸ்திரத்தன்மை மேம்படும்

முழு தானியங்கள் :

நம் உணவில் பெரும்பங்கு வகிக்கும் முழு தானியங்களில் ஜிங்க் சத்து நிறைய இருக்கிறது. ஆண்களின் ஆண்தன்மையை மேம்படுத்த உதவும் துத்தநாகம் உடலில் குறைந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

வேர்க்கடலை :

வேர்க்கடலையில் துத்தநாகச் சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், சரும வறட்சி, மலட்டுத்தன்மை, மூளை திசுக்கள் குறைபாடு ஆகியவற்றை தடுக்கலாம்.

மீன் :

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் உணவானது புரதத்திலும் சிறந்து விளங்குகிறது. அதிலும் மீனில் உள்ள புரதச்சத்து, HDL எனப்படும் இதய நோய்களை தவிர்க்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

கேழ்வரகு

கேழ்வரகில் கால்சியம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 300 கிராம் கேழ்வரகில் 100 கிராம் கால்சியம் உள்ளது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் வருவதை கேழ்வரகு தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து, டிஸ்லிபிடிமியா, நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது.

இளநீர்

வெளியே கடினமாகவும், உள்ளே மிருதுவாகவும் உள்ள இளநீர், உடலின் மின்பகுளி அளவை சீராக வைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மேலும் வயிற்றுப் போக்கின் மூலம் ஏற்படும் நீர் குறைபாடு ஆகியவற்றில் இருந்தும் காக்கிறது. அதுமட்டுமல்லாது மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் குறைபாட்டில் இருந்து பாதுகாக்கிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நுண்ணியிர்கள் வளர்வதை தடுக்கின்றன. டைப்-2 நீரிழிவு நோயை தடுக்கவும் லவங்கப்பட்டை பயன்படுகிறது.

Wednesday, 13 August 2014


தோள்பட்டைக்கு வலிமை தரும் பயிற்சி 

இடுப்பு, தோள் பட்டைகள் வலிமை அடைய இந்த பயிற்சி செய்யலாம். மேலும் பெண்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் மார்பு பகுதி கவர்ச்சிகரமாகமாறும். இந்த பயிற்சி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்... 

8 முதல் 10 கிலோ எடையுள்ள டம்ப்பெல்ஸ் எடுத்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் உள்ள சேரில் கால்களை கீழே நீட்டி கொண்டு படுத்துக் கொள்ளவும். வலது கையை வயிற்றின் மேல் வைத்துக்கொள்ளவும். இடது கையால் டம்ப்பெல்ஸ் மேலே தூக்கவும். பின்னர் கீழே இறக்கவும். இவ்வாறு 10 முறை செய்யவும்.

இதே போல் வலது கையில் செய்யவும். மாறி மாறி இவ்வாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி பெண்களுக்கு மிகவும் உகந்தது. ஜிம்முக்கு சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தும் இந்த பயிற்சியை செய்யலாம். டம்ப்பெல்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி செய்யலாம்.

Please Visit : www.unitedsportsemporium.com


பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா ?

பியர் அருந்தினால் உடல் கூல் ஆகும், மற்ற சரக்குகளில் இருப்பது போல் இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் 'குடி'மகன்கள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்களை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் நடுநிலையாகப் பார்த்தோமானால் அதன் உண்மையான ஆரோக்கிய விளைவுகள் என்ன என்பதைப் பார்த்தால் நமது மாயைகள் முடிவுக்கு வரும்.

உண்மையில் பியரில் சற்றே குறைவான அளவுகளில் சில வைட்டமின்கள் உள்ளது. ஆனால் அதுவும் தயாரிப்பில் காணாமல் போய்விடும். சிறிதளவே அதில் பி- 6 வைட்டமின் மற்றும் பிற கனிமங்கள் உள்ளன. ஆனால் அது பியர் தயாரிப்பு முறையில் காணாமல் போகிறது.

ஆதி சமூகங்கள் பியர் தயாரிப்பில் ஈடுபட்டபோது இயற்கையான முறைகளில் அதனை தயாரித்ததால் அதன் வைட்டமின் சத்துகள் தக்கவைக்கப்பட்டு ஆல்கஹால் அளவு குறைவாக தயாரிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன முதலாளிய சமூகங்களில் பியர் தேவைகள் அதிகரிக்க, அதன் உற்பத்தி முறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தானியத்தின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்ற மாத்தேறலை (மால்டிங்) பயன்படுத்துகிறது. பின்பு சர்க்கரையாக மாற்றப்பட்டது புளிக்கவைக்கப்படும். இது மிகவும் எளிமையான விளக்கமாகும். ஆனால் இதில் சிக்கல் நிறைந்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

அயல்நாடுகளில் இதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நம் இந்திய பியர்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் தேவை!

அதாவது ஒரு குறிப்பிட்ட தரநிலைகளில் தயாரித்தால் மட்டுமே பியர் அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைத் தக்கவைக்க முடியும், இது சில அயல்நாட்டு பியர்களிலேயே உள்ளது. வடிகட்டு முறையில் பல ஊட்டச்சத்துக்கள் போய் விடும்.

355மிலி பியரில் உள்ள 150 கலோரிகளில் இரண்டில் மூன்று பங்கு இருப்பது வெறும் ஆல்கஹால்தான், மீது ஒன்றில் மூன்று பங்கு சர்க்கரை உள்ளது. புரோட்டீன் அளவு மிகவும் குறைவு அதனால் எந்தவித பயனும் இல்லை என்றே கூறிவிடலாம்.

எனவே பியரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பது உண்மையல்ல. ஆல்கஹாலதான் அதிகம் உள்ளது.

மேலும் பியர் குடிப்பவர்களில் சிலர் 'அளவுக்கு அதிகமாக குடிப்பதில்லை நான் 3 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான், 2 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான்' என்பார்கள் ஆனால் ஒரு லிட்டர் பியரில் உள்ள கலோரியின் அளவு 600! இதுதான் உடல் எடை அதிகமாகக் காரணமாகிறது. மேலும் அதிகமாக பியர் குடிப்பதினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கநேரிடும் இதனால் பியரில் உள்ள குறைவான சில சத்துகளும் சிறுநீரில் வெளியேறிவிடுவதுதான் நடக்கும்.

'நான் சரக்கு அடிப்பதில்லை பியர் மட்டும்தான் அடிக்கிறேன் மச்சி என்று கூறும் நண்பர்களை எச்சரியுங்கள், பியர் மீதான இந்த தவறான நம்பிக்கைகளால் அது அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் வற்றுகிறது. இதனால் அதிக பியர்கள் தேவைப்படுகிறது. இதனையடுத்து பியர் அடிமைகளாகிவிடுவதுதான் நடைபெறுகிறது.

மேலும் பியருடன் நாம் என்ன சைட் டிஷ் சாப்பிடவேண்டும் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். உருளைக்கிழங்கு சிப்ஸ், கடலை, பட்டாணி என்று சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம் ஆனால் இதுபோன்ற உப்புக்கார பொருட்களால் தாகம் அதிகம் எடுக்கும் மேலும் பியர்கள் குடிப்போம்! எனவே சாலட்கள், கடல் உணவுகளான மீன், முட்டை, இறைச்சி கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பியரில் இருக்கும் குறைவான நன்மைகளின் பயன்களை உடல் பெறவேண்டுமென்றால் குறைவாகக் குடிப்பதே சிறந்தது.


உருளை கிழங்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையுமாம்

உருளைக் கிழங்கு என்று சொன்னாலே நம்பில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ், நொறுக்குத்தீனிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உருளைக் கிழங்கு என்றாலே 'ஐயோ' என்று அலறுபவர்களும் உண்டு. உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சினைகளை நினைத்து உருளைக் கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் 'நீங்கள் நினைப்பது தவறு. உருளைக் கிழங்குக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திரன் உண்டு என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக் கிழங்குகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை. மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு இரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக் கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இரத்தக் கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக் கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

பைடோ கெமிக்கல்என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில இரசாயனப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் உருளைக் கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக் கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால் இரத்த கொதிப்பை குறைக்கவல்ல இரசாயனப் பொருட்களும், பைடோ இரசாயன பதார்த்தம் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக் கிழங்கின் மாவுச்சத்து கொழுப்புச் சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது, கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கு என்பதால் நீங்கள் புலம்ப வேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ் சிவப்பு நிற உருளைக் கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன் தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.

இனிமேல் இரத்த அழுத்தம் குறைய தைரியமா உருளைக் கிழங்கு சாப்பிடலாம்!

Monday, 11 August 2014


இரவில் பால் சாப்பிடலாமா ? கூடாதா ?

டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.'

தினமும் தேவை குரோமியம் !

இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999இல் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே தான் வந்துள்ளது. இதற்கு உண்மையான காரணம், நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீஃபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவது தானாம். இதில் குரோமியம் உப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்களிலும் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலை உணவில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம்ஆகிய உணவுகளையும் சாப்பிடலாம்.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்பேது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைபாட்டை போக்கும் தயிர் சாதம்

புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே… உடம்புக்கு ஆகாது!” என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ்.

ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம் தானே.

நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம்.
அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ”இந்த க்ளை மேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடு வாங்களா?” என்று தோள் குலுக்கித் தவிர்த்து விடுவோம்.

ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவை யான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன.
அதை ‘ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.”

ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
”இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கா னிசம்ஸ்) நம் உடலில் உள்ளன.

ஒருவகை நுண்ணுயிரி யானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம்.

மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது.
இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும்.
இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம்.

நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன.
இவை உணவு செரித்தலுக் குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.

இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும் போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும்.
நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது.
பாலை உறைவிட்டு சிலமணி நேரங்கள் கழித் துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும்.
இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்கவைத்து, பொங்கி நுரைத்து வரச்செய்கிறது.

இதற்குள் தான் ‘பைஃபைடோ’ மற்றும் ‘லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும்.
தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில்
சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளை கட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.

#நன்மைகள்:

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம்,
ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
இதய நோயைத் தவிர்க்க வல்லது. தாகத்துக்கு ஏற்ற பானம் மோர்.

இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோ பயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.

Wednesday, 6 August 2014


தொப்பையை குறைக்க 14 வழிகள் 

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்:

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7, 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை தவிர்க்கவும்: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.


உடல் எடையை வேகமாக அதிகரிக்கும் உணவுகள் 

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் – Top foods to gain weightஉடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. 

பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா?ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம். உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.

சால்மன் மீன்

தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.

சூரை மீன்

சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.

இறால்

கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.

கோழியின் நெஞ்சுக்கறி

கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.

கொத்திய மாட்டிறைச்சி

சத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

முட்டை

உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.

சீஸ்/பாலாடைக் கட்டி

நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.

சிவப்பு இறைச்சி

போதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

ஓட்ஸ்

ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பாஸ்தா

ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

கோதுமை சப்பாத்தி

கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.

பீன்ஸ்

விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.

சேனைக்கிழங்கு

அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.

அவகேடோ (வெண்ணைப் பழம்)

பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.

வேர்க்கடலை வெண்ணெய்

அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பாதாம் வெண்ணெய்

ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய்

சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.