Wednesday, 30 September 2015

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!


இக்கால மக்களின் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து இருப்பதால், அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். இப்படி நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களின் பழக்கவழக்கங்கள் தான். ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். அதற்காக நாம் கெட்ட பழக்கங்களைப் பின்பற்றினால், அப்பிரச்சனைகளுக்கு விடிவு கிடைத்துவிடுமா?

என்ன புரியவில்லையா? பலர் தங்களுக்குள்ள பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியாக தூங்காமல் இருப்பது என்று இருக்கின்றனர். இப்படி இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, நாளடைவில் அது முற்றி சில சமயங்களில் மரணத்தைக் கூட தழுவ நேரலாம்.
எனவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் பழக்கங்களைக் கைவிட வேண்டும். அதற்கு அவைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து மாற்றிக் கொள்ளுங்கள்.................
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1134640949898913/?type=3&theater

Sunday, 27 September 2015

பருமனான கைகளுக்கு பயிற்சி!

டபுள் ஆர்ம் ட்ரைசெப்ஸ்

கால்களைச் சற்று அகட்டி, கைகளில் டம்பிள்ஸைப் பிடித்து, தலைக்குப் பின்புறம் வைத்தபடி நிற்க வேண்டும். இப்போது, மூச்சை இழுத்துப்பிடித்தபடி, டம்பிள்ஸைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். பிறகு, மூச்சை வெளியேற்றிபடி, கைகளைப் பின்நோக்கி இறக்கவும். இதேபோல 10 முறை செய்ய வேண்டும்.

 பைசெப் பிரேச்சி கர்ல் (Bicep brachii curl)

முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி நேராக நிற்க வேண்டும். கைகளை நீட்டி, இரண்டு கைகளிலும் டம்பிள்ஸைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.  இப்போது, கைகளை மெதுவாகக் கீழே இறக்கி, உயர்த்த வேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும்.

 ஹிப் ஹிஞ்ச் ட்ரைசெப்ஸ்(Hip hinge triceps )

கால்களைச் சற்று அகட்டி, உடலைச் சற்று வளைத்தபடி நிற்க வேண்டும். கைகளைச் சற்று மடித்து, மார்புக்கு முன்நேராக இருக்கும்படி வைத்து, டம்பிள்ஸைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, கைகளைப் பின்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்கு வர வேண்டும். இடைவெளி இன்றி தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்.

 பைசெப்ஸ் கர்ல்ஸ் டம்பிள்ஸ்(Bicep Curls dumbbells)

முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி நேராக நிற்க வேண்டும். கைகளை நீட்டி டம்பிள்.......
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1133245256705149/?type=3&theater

Friday, 25 September 2015

உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான்.

ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம்.

உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும்.

யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற்பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகளை பார்க்கலாமா!!!
,................
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1132329896796685/?type=3&theater

Tuesday, 22 September 2015

15 நிமிட உடற்பயிற்சி தரும் போனஸ்

தினமும் 15 நிமிடம் சீரான உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திர்க்கு நல்லது என தைவான் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சி பாங் வென் ஆய்வறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

அதன்படி தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இறப்பை ஏற்படுத்தும் காரணிகள் 14 சதவிதம் குறைகின்றன.

தினமும் 30-லிருந்து 45 நிமிடங்கள் வரை நடை, ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி என்று செய்வதைவிட 15 நிமிட சீரான உடற்பயிற்சியே சிறந்தது.
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1130860780276930/?type=3&theater


Monday, 21 September 2015

தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

திருஷ்டியைக் கழிப்பதற்கு வெள்ளை பூசணியைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவுகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம்.

வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வெள்ளை பூசணியை தினமும் காலையில் ஜூஸ் போட்டு காபிக்கு பதிலாக குடித்து வந்தால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1130189720344036/?type=1&theater

Sunday, 13 September 2015

தப்பி, தவறியும் கூட இந்த ஐந்து உணவை சாப்பிட்டுவிடக் கூடாது? ஏன் என்று தெரியுமா??

நமது உணவுப் பழக்க கலாச்சார மாற்றத்தினால் தான் மக்கள் மத்தியில் நீரிழிவு நோய், உடல் பருமன், இதயக் கோளாறுகள் போன்றவை அதிகமாக காரணம். ஏதோ, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது போல நீரிழிவு ஏற்பட்டிருக்கிறது என மக்கள் கூறுவது சோகமான உண்மை.

இதை சிலர் பேஷனாக கருதுகிறார்கள். ஏன் இவ்வளவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது? இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி திடீரென இது பூதாகரமாக எழும்புகிறது? போன்ற கேள்விகள் நமது மனதில் எழாமல் போனதே வருத்தத்திற்குரியது தான்.....
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1124910237538651/?type=1&theater

Thursday, 10 September 2015

முதுமையைத் தள்ளிப் போட ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டிய உணவுகள்!

சமீபத்திய மாசடைந்த சுற்றுச்சூழலால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சரும செல்கள் வறட்சியடைகின்றன. எனவே சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும். மேலும் சரும நிபுணர்கள், முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களைத் தடுக்க போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும் என்கின்றனர்.

அதற்காக நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியும். எனவே தண்ணீர் குடிப்பதுடன், நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால், உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு முதுமையைத் தள்ளிப் போடலாம். இங்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உண..........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1122986774397664/?type=1&theater

Wednesday, 9 September 2015

உங்கள் தாடையை குறைக்க எளிய பயிற்சிகள்:

இரட்டை தாடை!

உடல் பருமனில் முக்கிய அச்சத்தை ஏற்ப்படுத்தி உடற்பயிற்சி மையத்துக்கு போக தூண்டுகிறது.

ஆனால் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவை உடலின் மற்ற பகுதிகளுக்கு நல்ல பலனை தரும். ஆனால் தாடை பகுதிக்கு அதிக பலன் தரும் என சொல்ல முடியாது.

ஆனால் பயம் வேண்டாம்!

தாடைப் பகுதியை குறைக்கும் 5 வழிகள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1122467651116243/?type=1&theater

Tuesday, 8 September 2015

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை

வயிறு, தொடை மற்றும் இடை பகுதியில் பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கொடி இடை தட்டையான சிக்கென்ற வயிற்றுப் பகுதி இவற்றை வேண்டாம் என்று கூறாத பெண்கயே கிடையாது.

இவற்றை பெற நாம் நம் பழக்கங்களை மாற்றி அவற்றை தொடர்ந்து எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். தினமும் கண்ணாடியை பார்க்கும் போது இனிமேல் கடுமையான டயட் மற்றும் உடல்பயிற்சி செய்யவேண்டும் என்று நாம் அனைவருமே நினைப்பதுண்டு. ஆனால் உணவை பார்க்கும் போது நாளையில் இருந்து டயட் இருக்கலாம் என்று நான்றாக சாப்பிட்டுவிட்டு, மறுநாள் சரியாக சாப்பிடாமல் டயட் இருப்பார்கள்.

அதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. இதனால் நம்மால் எந்த உடல் பயிற்சியையும் நெடுநேரம் பண்ணமுடியாமல் போய்விடும். ஆகவே எப்போதும் சீரான
...............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1121884191174589/?type=1&theater

Monday, 7 September 2015

வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி; 5 ஆண்டு ஆயுளைக் கூட்டும்

புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நார்வேயில், 5,700 வயோதிக ஆண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று மணிநேர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்யாத வயோதிகர்களைவிட, ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

வயதோரிகர்களது ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துமாறு, பிரிட்டிஷ் ஜேர்ணல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையில், ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் கூடியதொரு அழைப்பு விடுத்துள்ளனர்.

வயோதிகர்கள் மத்தியில் குறைந்துவரும் உடற்பயிற்சி குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்ததை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நார்வேயின், ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலை மேற்கொண்ட ஆய்வில், மிதமான உடற்பயிற்சி, மற்றும் தீவிர உடற்பயிற்சி, ஆகிய இரண்டுமே ஒருவரின் ஆயட்காலத்தை நீடிப்பதாக தெரிவித்துள்ளது.

65 வயதிற்கு மேற்பட்ட வயோதிகர்கள், வாரத்திக் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என, பிரித்தானியாவில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

68 தொடக்கம் 77 வயதிற்குட்பட்டவர்கள், வாரம் ஒன்றிற்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், எந்த பலனும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பதினொரு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஏதாவது ஒருவகை உடற்பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடம் வாரத்துக்கு ஆறுமுறை செய்யும்போது,........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1121322894564052/?type=1&theater

Sunday, 6 September 2015

நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்!!

நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வாலிப வயது மட்டும் தான் கல்லையும் கரைக்கும். வயதாக வயதாக, பஞ்சை கரைக்க கூட சிரமப்படும் நமது உடலியக்கம்.

அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.

உதாரணமாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு. எனவே, நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.....
...........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1120820467947628/?type=1&theater


Friday, 4 September 2015

வயிற்று கொழுப்பை குறைப்பது

வயிற்று கொழுப்பை குறைப்பது என்பது ஒரு சவாலான ஒன்றுதான். உங்கள் முயற்சிகள் உங்கள் வயிற்று கொழுப்பை குறைக்காததுபோல் நீங்கள் உணர்ந்தால் இந்த கீழ் கண்ட முறைகளை பின்பற்றவும்.

உங்கள் வயிற்றில் மாற்றம் கொண்டுவரும் 5 முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
............
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1119727548056920/?type=1&theater

Wednesday, 2 September 2015

உடற்பயிற்சி முறைகள் பற்றி டிப்ஸ்

உடற்பயிற்சி முறைகள் பற்றி டிப்ஸ்

உடற்பயிற்சி செய்யும்போது பலரும் ஆர்வக்கோளாறில் முறை தவறி சில உடற்பயிற்சிகளை செய்கின்றனர். தகுந்த பயிற்சியாளர் இல்லாமல் எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்யக்கூடாது. உடற்பயிற்சியை சரியாக செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருப்பவர் காவல்துறை உயரதிகாரி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள். அவர் கூறும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி கீழே பார்ப்போம்.
,...........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1118746648155010/?type=1&theater



Tuesday, 1 September 2015

முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்

முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்..

முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடைவதை காணலாம். முதலில் விரிப்பில் அமர்ந்து கால்களை முன்புறமாக நீட்டிக்கொள்ள வேண்டும். சுவாசத்தை இயல்பான நிலையில் வைத்து முன்னால் குனிந்து உங்கள் கைகளால் கால்களின் கணுக்காலை தொட வேண்டும்.

அவ்வாறு குனியும் போது........
https://www.facebook.com/unitedgymandfitnesscentre/photos/a.685545871475092.1073741826.682366491793030/1118248941538114/?type=1&theater