Thursday, 24 July 2014


பப்பாளி

மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளி பழத்தில் தான் மிகுதியான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இதய குழாய்கள் முதல் பெருங்குடல் வரை பல நன்மை இருக்கிறது. இதில் உள்ள மற்ற நன்மைகள் – இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும்.

மலட்டுத்தன்மை

பப்பாளி விதைகளை வெந்நீரில் போட்டு குடித்தால், குடும்ப கட்டுப்பாட்டிற்கு உதவி புரியும் என்று சில பேர் நம்புகின்றனர். உங்களின் சொந்த இடர்பாட்டில் இதனை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரக கோளாறு

பப்பாளி விதைகளின் பயன்களை பற்றி பல பேருக்கு தெரிவதில்லை. ஜெல்லி போன்ற தோற்றத்தை கொண்ட இதன் விதைகளில் பாக்டீரியாவை அழிக்கும் குணம் உள்ளது. சிறுநீரக கோளாறு, ஈரலை சுத்தப்படுத்துதல் மற்றும் நச்சுத் தன்மையை நீக்குதல் போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கும்.

சளியை போக்கும்

அடிக்கடி சளி பிடித்து கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே உணவில் பப்பாளியை சேர்த்துக் கொண்டால், சளி மற்றும் இருமலை நீக்க போராடும். மேலும் பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கும்.

பல்வேறு வலிகளுக்கு நிவாரணி

கீல்வாதம், எலும்புத்துளை நோய் அல்லது வேறு ஏதாவது வலிகளுக்கும் பப்பாளியை உண்ணலாம். இது வலியை குறைக்க உதவும். மேலும் அழற்சியை எதிர்க்கும் குணத்தை கொண்டுள்ளதால், வேகமாக ஆற வைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.

எடை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்கும் டயட்டை கடைப்பிடிக்கிறீர்களா? அப்படியானால் குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

செரிமான பாதை பிரச்சனை

நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டால், அவை செரிமான பாதையில் சில நேரம் சுலபமாக செல்லாது. இப்படி அடைப்பட்டிருக்கும் பொருட்கள், தேற்று தன்மையை ஏற்படுத்திவிடும். ஆகவே அதனை பப்பாளி பழம் சிறப்பாக சரிசெய்யும். உதாரணத்திற்கு, பெருங்குடலில் சளி அடைத்து இருந்தால், அதனை பப்பாளி ஜூஸ் நீக்கி விடும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால், இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்

உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை உண்ணுங்கள். அதில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது.

வைட்டமின் ஏ குறைபாடு

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.

No comments:

Post a Comment