Thursday, 24 July 2014


தேனின் பயன்கள் 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் இளைக்கும்.

உடல் எடை அதிகரிக்க இரு வேளை தேனை பாலில் கலந்து பருக வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.

ஒரு சிறு கரண்டியில் சிறிது தேனை எடுத்துக்கொள்ளவும். தேனின் அளவைவிட இரண்டு மடங்கு மிதமான சூடுநீரில் சிறிது கிராம்புத்தூளையும் கலந்து கால் மூட்டியில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். சில நிமிடங்களில் வலி நின்றுவிடும்.நெடுங்காலமாக வலி இருந்தால் காலையிலும், மாலையிலும் ஒரு கப் மிதமான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் தேனோடு ஒரு ஸ்பூன் கிராம்புத்தூளையும் கலந்து பருகி வந்தால், நீண்ட நாள் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். (இது படித்த தகவல்.)

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.

1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1ஸ்பூன் தேன் கொடுத்தால் பசி எடுக்கும்.

இரண்டு ஸ்பூன் தேனோடு, மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயூடன் கலந்து குடித்தால், கொலெஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும். நீண்ட நாள் கொலெஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் மூன்று முறை இதேபோல் குடித்தால் குணம் கிடைக்கும்.

இரவில் சிறு நீர் போகும் குழந்தைகளுக்கு குழந்தை தூங்கும் முன்பு ஒரு ஸூபூன் தேன் கொடுத்தால் சில நாட்களில் சரியாகும்.

No comments:

Post a Comment