Friday, 18 July 2014


கால்களை வலுவாக்கவும், கால்களில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கவும் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியது.. இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் முட்டி வரை மடக்கவும். 

கைகளை தோள்பட்டைக்கு நிகராக நீட்டவும். பின்னர் வலது காலை மட்டும் மேல் நோக்கி தூக்கவும். இந்த நிலையில் மெதுவாக உடலை இடுப்பு வரை மேல் நோக்கி தூக்க வேண்டும் (படத்தில் உள்ளபடி). இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

பின்னர் கால்களை மாற்றி இடது பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் உங்கள் கால்கள் வலிமையுடனும், அழகாகவும் இருப்பதை காணலாம். இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் மட்டும் செய்தால் போதுமானது. விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியது.

No comments:

Post a Comment